- Home
- Gallery
- இந்தியன் 2-வை விட 3 மடங்கு அதிக வசூல் அள்ளிய ராயன்! அடங்காத அசுரனிடம் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடிவாங்கிய ஆண்டவர்
இந்தியன் 2-வை விட 3 மடங்கு அதிக வசூல் அள்ளிய ராயன்! அடங்காத அசுரனிடம் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடிவாங்கிய ஆண்டவர்
தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படம் 5 நாட்கள் முடிவில் உலகளவில் எவ்வளவு வசூலித்து உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Raayan
தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ், இவர் கைவசம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் குபேரா, இந்தியில் ராஞ்சனா 2 போன்ற படங்கள் லைன் அப்பில் உள்ளன. இதுதவிர கோலிவுட்டில் இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், புதுப்பேட்டை 2, வடசென்னை 2 என தனுஷின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி நடிகனாக படுபிசியாக இருக்கும் தனுஷ், சைடு கேப்பில் இரண்டு படங்களை இயக்கி முடித்துவிட்டார்.
Raayan Dhanush
அதில் ஒன்று, ராயன் மற்றொன்று நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில் ராயன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆனது. தனுஷின் 50வது படம் இது என்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ராயன் திரைப்படத்தை செம்ம மாஸாக எடுத்து நடிகனாக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜெயித்திருக்கிறார் நடிகர் தனுஷ்.
இதையும் படியுங்கள்... ‘இந்தியன் 2’ 400 கோடி வசூல்.. நீங்க நம்பலேனாலும் அதுதான் நிஜம்- போஸ்டர் ஒட்டி கமல் ரசிகர்கள் போட்ட புது கணக்கு
Raayan Box Office collection
ராயன் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக வாட்டர் பாக்கெட் பாடல் திரையிலும் ரசிக்கும் படியான நடன அசைவுகளுடன் இருந்ததால், இன்று இன்ஸ்டாகிராமில் திரும்பிய பக்கமெல்லாம் அப்பாடலின் ரீல்ஸ் தான் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
Raayan beats indian 2
ராயன் திரைப்படம் ரிலீசான 5 நாட்களில் ரூ.97 கோடி வசூலித்து உள்ளதாம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.46 கோடி வசூலித்துள்ள இப்படம், வெளிநாட்டில் ரூ.29 கோடி வசூலித்து உள்ளது. இதில் 5ம் நாளான நேற்று மட்டும் ராயன் படம் ரூ.10 கோடி வசூலித்து இருக்கிறது. இந்தியன் 2 படத்தின் ஐந்தாம் நாள் கலெக்ஷனோடு ஒப்பிட்டு பார்த்தால் அதைவிட 3 மடங்கு அதிகம் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது ராயன். இந்தியன் 2 திரைப்படம் ஐந்தாம் நாளில் வெறும் ரூ.3 கோடி மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சுத்த வேஸ்ட்... நிறைய பிராடு வேலைகளை பார்க்கிறார் - EX மாமியார் பற்றி சுசித்ரா சொன்ன ஷாக்கிங் சீக்ரெட்