மாதம் ரூ. 42 முதலீடு செய்தால், வாழ்நாள் முழுவதும் ரூ. 12,000 ஓய்வூதியம் பெறலாம்.. அரசின் அசத்தல் திட்டம்..
இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 200 ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் 5000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறலாம்
ஓய்வுக்குப் பிறகும் வழக்கமான வருமானம் யாரையும் சார்ந்து இல்லாமல், தங்களுக்கென வழக்கமான வருமானம் வேண்டும் என்பதே சாமானிய மக்கள் பலரின் விருப்பமாக உள்ளது. குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் அல்லது எந்த ஓய்வூதிய திட்டத்திலும் முதலீடு செய்யாதவர்களுக்கு ஓய்வுகாலம் பற்றிய கவலை இருக்கும். ஆனால் ஓய்வுகாலத்தை நிம்மதியாக வழிநடத்தும் வகையில் மத்திய அரசு ஒரு அசத்தல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 200 ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் 5000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறலாம். ஆம். மத்திய அரசின் அடல் பென்ஷன் திட்டம் குறித்து தான் நாம் பார்க்க போகிறோம்.
இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வெறும் 210 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு பெற்ற பிறகு, அதாவது 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 5,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
அடல் பென்சன் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் உத்தரவாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி 18 வயதாகும் போது, இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.210 முதலீடு செய்தால் அவர் தனது ஓய்வு காலத்தில் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்.
மேலும் இதே தொகையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 626 ரூபாயும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 1,239 ரூபாயும் செலுத்த வேண்டும். 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் பெற விரும்பினால், நீங்கள், 18 வயதில் இந்த திட்டத்தில் மாதம் ரூ.42 செலுத்த வேண்டும். இதன் மூலம் 60 வயதுக்கு பிறகு ஒரு மாதத்திற்கு ரூ.1000 என மாதத்திற்கு ஒரு ஆண்டுக்கு ரூ.12,000 ஓய்வூதியம் பெற முடியும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வு காலத்தில் உத்திரவாத வருமானத்தை உறுதி செய்ய மத்திய அரசு அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அமைப்புசாரா துறையுடன் தொடர்புடையவர்கள் ஓய்வு பெற்ற பிறகு வருமானம் இல்லாத தவிக்கக்கூடாது என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நடத்தப்படுகிறது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், பயனர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறமுடியும். மத்திய அரசு தனது பங்களிப்பாக சந்தாதாரரின் பங்களிப்பில் 50 சதவீதம் அல்லது ஆண்டுக்கு ரூ 1,000 வழங்குகிறது.
அரசின் எந்தவொரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறாத, வரி செலுத்தாத மக்களுக்கு உதவ அரசாங்க பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ அதை பொறுத்து ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தில் சிறு வயதிலேயே சேர்ந்தால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.