- Home
- Gallery
- Rekha Krishnappa: தெய்வமகள் அண்ணியார் ரேகா செம்ம லக்கி! திறமையை நிரூபிக்க மீண்டும் கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பு
Rekha Krishnappa: தெய்வமகள் அண்ணியார் ரேகா செம்ம லக்கி! திறமையை நிரூபிக்க மீண்டும் கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பு
தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமான ரேகா கிருஷ்ணப்பாவுக்கு மீண்டும் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபிக்கும் விதத்தில் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

rekha krishnappa
'தெய்வமகள்' சீரியல் மூலம் பிரபலமானவர் கன்னட சீரியல் நடிகையான ரேகா கிருஷ்ணப்பா. 'தெய்வமகள்' சீரியலில் அண்ணியாராக நடித்து மிரட்டிய இவருக்கும் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதத்தில் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
rekha krishnappa
சன் டிவியில் நடிகை வாணி போஜன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018-ஆம் ஆண்டு வரை 5 வருடங்கள் ஒளிபரப்பாகி வந்த சீரியல் 'தெய்வமகள்'. இந்த தொடரில் ரேகா கிருஷ்ணப்பா மிகவும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
rekha krishnappa
இந்த ஒற்றை சீரியல், இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் செம பாப்புலராக மாற்றியது. இதைத் தொடர்ந்து தமிழ் சீரியல் உலகிலும் மிகவும் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறிய ரேகா, நந்தினி தொடரில் நடித்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சீதா ராமன்' தொடரில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
rekha krishnappa
ரேகா தெய்வமகள் சீரியலில், இரட்டை வேடத்தில் நடித்து... தன்னுடைய மாறுபட்ட நடிப்பை நிரூபித்தவர். இதை தொடர்ந்து, மீண்டும் இவருக்கு இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரைப்படங்களிலும் சரி, சீரியல்களிலும் சரி இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு ஹீரோ, ஹீரோயின், வில்லன் போன்ற முக்கிய ரோலுக்கு மட்டுமே கிடைக்கும்.
rekha krishnappa
ஆனால் ரேகா குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும்... தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபிக்கும் விதத்தில், இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளது இவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
rekha krishnappa
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சீதா ராமன்' தொடரில் ஜே டிசௌசா கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரியங்கா நல்கரி கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொண்டு இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். தற்போது அவருக்கு பதில் மிக மிக அவசரம், கொம்பு வச்ச சிங்கமடா, போன்ற பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரீ பிரியங்கா கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D