- Home
- Gallery
- கே.சி.பழனிசாமியால் எடப்பாடி பழனிசாமிக்கு வந்த புதிய சிக்கல்.! அதிர்ச்சியில் அதிமுகவினர்..!
கே.சி.பழனிசாமியால் எடப்பாடி பழனிசாமிக்கு வந்த புதிய சிக்கல்.! அதிர்ச்சியில் அதிமுகவினர்..!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதிமுகவின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தன்னை பற்றி இபிஎஸ் கூறியுள்ள கருத்துக்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கே.சி.பழனிசாமியின் வழக்கை ரத்து செய்ததற்கு தடை விதித்ததோடு இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இபிஎஸ் ஜனவரி 23-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.