- Home
- Gallery
- தீபிகா படுகோன் முதல் அமலா பால் வரை.. வயிற்றில் குழந்தையுடன் படங்களை விளம்பரப்படுத்திய நடிகைகள்..
தீபிகா படுகோன் முதல் அமலா பால் வரை.. வயிற்றில் குழந்தையுடன் படங்களை விளம்பரப்படுத்திய நடிகைகள்..
தீபிகா படுகோனே முதல் அமலா பால் வரை, கர்ப்ப காலத்தில் கூட தங்கள் படங்களின் புரமோஷன் விழாக்களில் கலந்து கொண்ட நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தீபிகா படுகோனே, ஆலியா பட் தொடங்கி அமலா பால், கர்ப்ப காலத்தில் கூட தங்கள் படங்களின் புரமோஷன் விழாக்களில் கலந்து கொண்ட நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தீபிகா படுகோன்
தற்போது தீபிகா படுகோனே தனது கர்ப்ப காலத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் 'கல்கி 2898 AD' திரைப்படத்தின் வெளியீட்டு விழாவின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா படுகோனின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் க்யூட் அம்மா என்று பதிவிட்டு வருகின்றனர்.
ஆலியா பட்
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட், கர்ப்பமாக இருக்கும் போதே சர்வதேச படமான 'ஹார்ட் ஆஃப் ஸ்டோன்' மற்றும் 'பிரம்மாஸ்திரா' மற்றும் 'டார்லிங்ஸ்' ஆகிய படங்களுக்கான புரமோஷன் பணிகளை மேற்கொண்டார்.
யாமி கௌதம்
யாமி கெளதம் தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கும் வேளையில் 'ஆர்ட்டிகல் 370'க்கான விளம்பரப் பணிகளை மேற்கொண்டார்.
கரீனா கபூர்
கரீனா கபூர் கான் தனது முதல் கர்ப்பத்தின் போது 'வீரே தி வெட்டிங்' இரண்டாவது கர்ப்ப காலத்தில் 'லால் சிங் சத்தா'வையும் விளம்பரப்படுத்தினார்.
Richa Chadha
ரிச்சா சாதா
'ஹீரமண்டி' வெப் சீரிஸில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்து பிரபலமான ரிச்சா சத்தா, தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கும் போது வெப் சீரிஸின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அமலா பால் :
அமலா பால் கர்ப்பமாக இருந்த போது ஆடு ஜீவிதம் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முன்னணி நடிகைகள் பலரும் படத்தின் புரமோஷன் பணிகளுக்கு வரமாட்டேன் என்று கூறி வரும் நிலையில் கர்ப்பமாக இருக்கும் போது கூட இந்த நடிகைகள் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதற்கு சமூக வலைதலங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன..