எல்லா படமும் டல்லடிக்குது.. ஒரு Vibe இல்ல.. சொதப்பிய தீபாவளியால் கடுப்பில் ரசிகர்கள் - முக்கிய காரணம் என்ன?
Deepavali Release Movies : உலக அளவில் இந்தியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றுதான் தீப ஒளி திருநாள். அதேபோல தீபாவளி என்றாலே பட்டாசுகளும், இனிப்புகளும் அத்தோடு சேர்த்து அன்று வெளியாகும் திரைப்படங்களும் தான் சிறப்பு வாய்ந்தவை.
Deepavali Movie
ஒரு காலத்தில் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி மவுசு இருந்து வந்தது. அன்றைய தினம் வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறியது, தங்களுடைய அபிமான நடிகர் நடிகைகளின் திரைப்படங்களை காண ரசிகர்கள் கூட்டம் ஒவ்வொரு திரையரங்குகளிலும் அலைமோதும். பட்டாசுகளை, வாணவேடிக்கைகளும் சூழ, படத்தை ரசித்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களுக்கு அவ்வளவு மன மகிழ்ச்சி இருக்கும்.
Japan
அதேபோல இந்த ஆண்டும் தீபாவளி திருநாளை முன்னிட்டு கார்த்தியின் ஜப்பான், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யாவின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் விக்ரம் பிரபுவின் ரெய்டு உள்ளிட்ட திரைப்படங்கள் நேற்று கோலாகலமாக வெளியானது. ஆனால் இந்த மூன்று திரைப்படங்களுமே ஒரு மாஸ் திரைப்படங்களாக மாறவில்லை என்று தான் கூறவேண்டும். அதிலும் குறிப்பாக தீபாவளி படங்களாக அமையவில்லை என்பது தான் கூடுதல் கசப்பு.
Theater Celebration
அதிலும் குறிப்பாக ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா ஆகிய இரு படங்களும் பெரிய அளவில் ரசிக்கும் வண்ணம் அமையவில்லை. வெளியான மூன்று திரைப்படங்களும் பெரிய அளவில் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் பொழுதுபோக்கு ரீதியாக இது ஒரு சொதப்பல் தீபாவளியாகவே கருதப்படுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். நேர்த்தியான கதைய அம்சம் இருந்தும் ரசிகர்களை மகிழ்விக்க திரைப்படங்கள் தவறுவவதே இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. புதிய கதைக்களத்தோடு இயக்குனர்கள் வந்தாலும், அவை ரசிகர்களுக்கு ஏற்ற படமாக மாறுவது கடினமாகியுள்ளது.