- Home
- Gallery
- School College Leave: ஹாப்பி நியூஸ்.. வரும் 26ம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
School College Leave: ஹாப்பி நியூஸ்.. வரும் 26ம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு டிசம்பர் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ramanathapuram district collector
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்களநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய் கிழமை) அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Leave
26.12.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடுசெய்யும் விதமாக 2024-ம் ஆண்டு ஜனவரி (06.01.2024) சனிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
ramanathapuram
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஸ்ரீ மங்களநாத திருக்கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 26.12.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.