- Home
- Gallery
- Shaalin Zoya : பிளாக் கலர் ட்ரெஸ்ஸில் ஏஞ்சல் போல இருக்கும் ஷாலின் ஜோயா.. க்யூட் போட்டோஸ்..
Shaalin Zoya : பிளாக் கலர் ட்ரெஸ்ஸில் ஏஞ்சல் போல இருக்கும் ஷாலின் ஜோயா.. க்யூட் போட்டோஸ்..
நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளருமான ஷாலின் ஜோயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shaalin Zoya Pic
1997-ம் ஆண்டு கேரளாவின் மலப்புரத்தில் பிறந்தவர் ஷாலின் ஜோயா. குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானா இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
shaalin zoya
மலையாள குறும்படங்கள், ஆங்கில குறும்படங்களிலும் நடித்துள்ள ஷாலின் ஜோயா சில மலையாள டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.
Shaalin Zoya
நடிகை, தொகுப்பாளினி, இயக்குனர், டான்சர் என பன்முக திறமை கொண்ட அவர், 2016-ம் ஆண்டு ராஜா மந்திரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஷாலின் ஜோயா.
Shaalin Zoya Latest Pic
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான கண்ணகி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தின் புரோமோஷன் பணியின் போது தான் பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசனை ஷாலின் ஜோயா சந்தித்தார். இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் பின்னர் காதலர்களாக மாறினர்.
Shaalin Zoya Latest Pic
டிடிஎஃப் – ஷாலின் இருவரும் அவ்வப்போது தங்கள் புகைப்படங்களியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஷாலின் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றுள்ள ஷாலின் ஜோயாவுக்கு என்று தனி ரசிக பட்டாளமே உள்ளனர்.
எனினும் சமீபத்தில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷாலின் ஜோயா பங்கேற்கவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவரின் இன்ஸ்டா பக்கத்தில் அவரின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் நலம் விசாரித்து வந்தனர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷாலின் ஜோயாவை மிஸ் செய்ததாகவும் கருத்து பதிவிட்டு வந்தனர்.
Shaalin Zoya Latest Pic
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாலின் ஜோயா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
Shaalin Zoya Pic
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் லேட்டஸ் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பிளாக் கலர் லாங் கவுனில் க்யூட்டாக போஸ் கொடுக்கும் போட்டோக்களை அவர் பதிவிட்டுள்ளார். அவரின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.