- Home
- Gallery
- குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் சோயாவா இது? குழந்தை நட்சத்திரமாக சீரியலில் நடித்தபோது எடுத்த Rare போட்டோஸ்
குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் சோயாவா இது? குழந்தை நட்சத்திரமாக சீரியலில் நடித்தபோது எடுத்த Rare போட்டோஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை ஷாலின் சோயாவின் குழந்தை பருவ புகைப்படங்களை பார்க்கலாம்.

shaalin zoya
மலையாள நடிகையான ஷாலின் சோயா, சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த கொட்டேஷன் என்கிற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த ஷாலின் சோயாவுக்கு தமிழ் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் ராஜா மந்திரி.
Cook with comali fame Shaalin Zoya
இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலின் சோயா. அப்படத்தை தொடர்ந்து கடந்தாண்டு வெளிவந்த கன்னகி திரைப்படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் ஷாலின் சோயா. அப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்துக்கு பின்னர் நடிகை ஷாலின் சோயாவுக்கு சின்னத்திரையின் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படியுங்கள்... கவுத்திவிட்ட கேப்டன் மில்லர்... 50வது படத்தில் கம்பேக் கொடுப்பாரா தனுஷ்? ராயன் மூவி சிறப்பம்சங்கள் ஒரு பார்வை
shaalin zoya acted in serial
அதை ஏற்று தற்போது அந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் ஷாலின் சோயா. அந்நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி சக போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுத்து வரும் அவர், பிரபல யூடியூப்பரான டிடிஎப் வாசனையும் காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு ரொமாண்ஸ் செய்தும் வருகிறார்.
shaalin zoya childhood photo
இந்நிலையில் நடிகை ஷாலின் சோயா குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரை சீரியல்களில் நடித்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதன்படி மலையாளத்தில் ஒளிபரப்பான குடும்பயோகம், ஆட்டோகிராப் போன்ற சீரியல்களில் ஷாலின் சோயா குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகின்றன.
இதையும் படியுங்கள்... ஜெயாவை திருமணம் செய்ய அமிதாப் பச்சன் போட்ட கண்டிஷன் இதுதான்.. பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ரகசியம்..