Special Train: ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்! தொடர் விடுமுறை! சிறப்பு ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் மைசூருல் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
Special Train
தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் தொடர் விடுமுறை வருவதையொட்டி மைசூருல் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Southern Railway
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்: செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: இனி ஈஸியாக ரயில் டிக்கெட் பெறலாம்! நம்ம ஊரிலும் வந்தாச்சு.. எப்படி தெரியுமா?
Mysore to Shenkottai
அதன்படி செப்டம்பர் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம் வழியாக சேலம், கரூர் திருச்சி வழியாக காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு மறுநாள் பிற்பகல் 4.50க்கு சென்றடைகிறது.
Shenkottai to Mysore
அதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு செல்லும் ரயில தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், மானமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், குப்பம், பெங்களுர் வழியாக பிற்பகல் 2.20 மணிக்கு மைசூருக்கு சென்றடைகிறது.