- Home
- Gallery
- இக்கட்டான சூழலில் நடிகை தேவயானிக்கு உதவிய சிங்கமுத்து.. இருவருக்கும் இப்படி ஒரு உறவா? Flashback..
இக்கட்டான சூழலில் நடிகை தேவயானிக்கு உதவிய சிங்கமுத்து.. இருவருக்கும் இப்படி ஒரு உறவா? Flashback..
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ராஜகுமாரனை சினிமா பாணியில் தான் திருமணம் செய்து கொண்டார் தேவயானி.

Devayani
மகாராஷ்ட்ராவின் மும்பையில் கொங்கனி தந்தைக்கும் மலையாளி தாய்க்கும் மகளாக பிறந்தவர் தான் தேவயானி. நடிகை தேவயானியின் சொந்த பெயர் சுஷ்மா ஜெயதேவ். இவருக்கு நகுல், மயூர் என்ற இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். கின்னரிபுழையோரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் தேவயானி.
Devayani
இதை தொடர்ந்து தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் எண்ட்ரி கொடுத்தார். எனினும் அவர் பிரபலமானது காதல் கோட்டை படத்தில் தான். அந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த தேவயானி நடித்திருப்பார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
Devayani
பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அவர் 90களின் பிற்பகுதியில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். குறுகிய காலக்கட்டத்தில் 50 படங்களுக்கு மேல் அவர் நடித்திருந்தார். இதில் பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன.
Devayani
இதனிடையே சூரியவம்சம் படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரனின் நடவடிக்கைகள் பிடித்து போகவே அவரை காதலிக்க தொடங்கினார். எனினும் தனது காதலுக்கு தேவயானி பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ராஜகுமாரனை சினிமா பாணியில் தான் திருமணம் செய்து கொண்டார் தேவயானி.
Devayani
பல பிரச்சனைகளுக்கு பிறகு திருத்தணி கோயிலில் தேவயானி – ராஜகுமாரன் திருமணம் நடைபெற்றது. அப்போது சாட்சி கையெழுத்து போட்டது பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து தானாம். ராஜகுமாரனை விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டதே சிங்க முத்து தான் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Devayani
தேவயானி - ராஜகுமாரன் தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் தொடர்ந்து நடித்த வந்த தேவயான சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கினார்.
Devayani
கோலங்கள், முத்தாரம், ராசாத்தி என பிரபல ஹிட் சீரியல்களில் நடித்த அவர் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது ஜெயம் ரவியின் ஜெனி படத்தில் தேவயானி நடித்து வருகிறார்.