Intercity Express Train: கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணி காரணமாக செப்டம்பர் 1ம் தேதி கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
Southern Railway
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 1ம் தேதி கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Intercity Express Train
அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 1-ம் தேதி கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே இயங்காது.
இதையும் படிங்க: Tirupati Trains : திருப்பதி போற பிளான் இருக்கா! அப்படினா தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பை பாருங்க!
Intercity Express Train Change
அதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 1-ம் தேதி சென்னை சென்ட்ரல் - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கோவை வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.