17 நாட்கள் பயணம்.! எங்கே செல்கிறார்.? யாரை சந்திக்கிறார் ஸ்டாலின்- வெளியான தகவல்
தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். சான் பிரான்சிஸ்கோ, சிக்காகோ உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று முன்னணி நிறுவனங்களுடன் சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்திற்கு வெளிநாடு முதலீடுகள்
தமிழகத்திற்கு வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவிற்க்கு தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் ஸ்டாலின் துபாய், ஜப்பான், ஸ்பெயின் என பல நாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக வருகிற 27ஆம் தேதி இரவு அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு எந்த பகுதிக்கு செல்லவுள்ளார். யாரையெல்லாம் சந்திக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் எந்த பகுதிக்கு செல்லவுள்ளார்.
அதன் படி முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்க செல்லவுள்ளார். சென்னையில் இருந்து 27-ம் தேதி அமெரிக்கா செல்லும் தமிழக முதலமைச்சர் 28 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை சென்றடைகிறார். 28ஆம் தேதியிலிருந்து 2ஆம் தேதி வரை சான் பிரான்சிஸ்கோவில் முக்கிய முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.
ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முக்கிய நிகழ்வான investors conclave கலந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழக மக்களுடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
சைலேந்திரபாபுவிற்கு நோ.. எஸ்.கே. பிரபாகருக்கு ஓகே சொன்ன ஆளுநர்- காரணம் என்ன.?
சிக்காகோ முதலீட்டாளர்களை சந்திக்கும் ஸ்டாலின்
செப்டம்பர் 2ஆம் தேதி சான் பிரான்சிஸ் கோவிலிருந்து விமானம் மூலம் சிக்காகோ செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், செப்டம்பர் 12ஆம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டர்களை சந்திக்க உள்ளார். சிக்காகோவில் உள்ள தமிழர்கள் சந்தித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசவுள்ளார்.
தமிழக முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கிய குறிக்கோளாக தமிழக மக்களுக்கு உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடாகும். அந்த வகையில் சர்வதேச அளவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுடன் தமிழக முதலமைச்சர் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கு முதலீட்டு ஈட்டுவது குறித்தும் முன்னணி நிறுவன தலைவர்களுடன் தமிழக முதலமைச்சர் ஒப்பந்தம் மேற்கொள்கிறார்.
17 நாட்கள் பயணம் - உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு
இதனை தொடர்ந்து செப்டம்பர் 12ஆம் தேதி தனது அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்கும் வகையில் தமிழகம் திரும்பவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழக முதல்வரின் 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தின் காரணமாக உதயநிதிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் கூடுதல் பொறுப்புகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.