- Home
- Gallery
- வரலட்சுமிக்கு கல்யாணம்.. தளபதி மட்டும் மிஸ்ஸிங்.. நேரில் வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள் - Latest Clicks!
வரலட்சுமிக்கு கல்யாணம்.. தளபதி மட்டும் மிஸ்ஸிங்.. நேரில் வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள் - Latest Clicks!
Varalaxmi Marriage : பிரபல நடிகை வரலட்சுமி, நிக்கோலை சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பல துறை பிரபலங்கள் அவருக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Suresh Gopi
நேற்று ஜூலை 3ம் தேதி பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. திரைத்துறையினர் மட்டுமல்லாமல், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
Panner Selvam
பிரபல நடிகர் சரத்குமாருக்கும், அவரது முதல் மனைவி சாவிற்கும் பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். சிறு வயது முதல் தனது தந்தை சரத்குமார் அவர்களால் மிகவும் கண்டிப்பாக வளர்க்கப்பட்ட மகள் தான் வரலட்சுமி. பாய்ஸ் படத்தில் ஜெனிலியா கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமிக்கு வந்த வாய்ப்பை வேண்டாம் என்றது சரத் தான்.
Annamalai
அதன் பிறகு அவர் திரைத்துறையில் போடா போடி என்ற படத்தின் மூலம் பயணிக்க துவங்கினார். கடந்த பல ஆண்டுகளாக சிங்கிளாக வலம் வந்த வரலட்சுமிக்கு வயது 39. இந்நிலையில் அவர் நிக்கோலை சச்தேவ் என்பவரை நேற்று ஜூலை 4ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
Stalin
வரலட்சுமி அவர்களின் கணவர் நிக்கோலை அவர்களும், தனது மாமனார் சரத்குமாரை போல ஒரு தீவிர உடற்பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றார்.
varalaxmi marriage
அவருடைய திருமணத்திற்கு பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, முன்னாள் முதல் பன்னீர் செல்வம், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கேரளா அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.