Tirupati Trains : திருப்பதி போற பிளான் இருக்கா! அப்படினா தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பை பாருங்க!
திருப்பதிக்குச் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
TirumalaTirupati
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்துதான் அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். பெரும்பாலும் பேருந்து மற்றும் ரயில் பயணங்களின் மூலம் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். பராமரிப்பு காரணமாக ரயில்கள் அவ்வப்போது ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில் அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Southern Railway
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இருமாா்க்கமாகவும் செப்டம்பர் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: One Day Tour Package: ஒருநாள் ஆன்மிக சுற்றுலா! வெறும் ரூ.650! எந்தெந்த கோயில்களை தரிசிக்கலாம் தெரியுமா?
Train Cancelled
அதேபோல் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில், மைசூரு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் செப்டம்பர் 1ம் தேதி காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பக் விரைவு ரயில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு செல்லும். சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு பயணிகள் ரயில் செப்டம்பர் 1ம் தேதி திருத்தணி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.