- Home
- Gallery
- கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் பள்ளிகள்! மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன மாநகர போக்குவரத்து கழகம்!
கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் பள்ளிகள்! மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன மாநகர போக்குவரத்து கழகம்!
கடந்த ஆண்டு பஸ் பாஸ் அட்டையை கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Summer Holiday
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
School Reopen
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், பழைய பஸ் பாஸ் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: School Students: 1000 ரூபாயை விட்டுடாதீங்க! பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அரசு தேர்வுகள் இயக்ககம்!
Transport Department
சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்: ஜூன் 10ம் தேதி பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாணவர், மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த 2023-24ல் வழங்கப்பட்ட பழைய பயண அட்டை, பள்ளிகளில் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை நடனத்துனரிடம் காண்பித்து தங்கள் இருப்பிடத்திலிருந்து பள்ளி வரையிலும் மாணவர்கள் பயணிக்கலாம்.
இதையும் படிங்க: School Student: மாணவர்களுக்கு குட்நியூஸ்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மாஸ் அறிவிப்பு.!
School Bus Pass
இதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்களும் இச்சலுகை பொருந்தும். மேலும் பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து இம்மாத இறுதிக்குள் பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க அலுவலர்கள் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கிச் செல்ல அனைத்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.