துப்பட்டாவை வீசி நகை அபேஸ்! சிக்கிய சகோதரிகள் அதிர்ச்சி தகவல்!
Chennai Electric Train Gold Jewelry Theft: சென்னை மின்சார ரயில்களில் நெரிசலில் பெண்களின் நகைகள் திருடுபோவது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வௌியானது.
Chennai Electric Train
சென்னை மின்சார ரயில் காலை மற்றும் மாலை நேரங்களில் எப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் தங்க நகைகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுபோவதாக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகியது. இதனையடுத்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதையும் படிங்க: School Student: தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு! இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்!
Railway Police
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மின்சார ரயிலில் கூட்ட நெரிசலில் ஏறும் பெண்களின் மீது துப்பாட்டாவை வீசி கழுத்தில் உள்ள நகையை திருடுவது தெரியவந்தது. இதனையடுத்து ஓடும் ரயில்களில் நகை திருட்டில் ஈடுபட்ட ஓசூரை சேர்ந்த கண்மணி, ரேகா சகோதரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 14 வழக்குகளில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து 12 கிராம் தங்க கட்டிய பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: Kundrathur Abirami: குன்றத்தூர் அபிராமியை நினைவிருக்கா? வழக்கின் நிலை என்ன? தீர்ப்பு எப்போது?
Women Arrested
பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி காத்திருந்தது. வாரத்தின் 7 நாட்களில் திங்கள், புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களை தேர்வு செய்து வழிபறியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ரயிலில் ஏறும் வயதான பெண்கள் மீது துப்பட்டாவை வீசி, எந்த சந்தேகமும் இல்லாமல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சகோதரிகள் இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாம்பலம் ரயில்வே போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.