மாணவர்களுக்கு குட் நியூஸ்.! ஊக்கத்தொகையோடு தொழிற்பயிற்சி.! 100% வேலை உறுதி - உடனே விண்ணப்பியுங்கள்
இரண்டாண்டு. ஓராண்டு, ஆறு மாத காலம் என தொழிற்பயிற்சியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாதம், மாதம் ஊக்கத்தொகையோடு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும், பயிற்சி முடிந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில்நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொழிற்பயிற்சி -மாணவர்களுக்கு அழைப்பு
10-வது தேர்ச்சி மற்றும் +2. டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை அறிவியல், பொறியியல் படித்தவர்களும் வேலைவாய்ப்பினை உடனடியாக தொழிற் நிறுவனங்களிலும், மத்திய மாநில அரசு நிறுவனங்களிலும் பெறும் வகையில் இப்பயிற்சியில் சேர அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகள்
சிவில் என்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில் டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், லிப்ட் மெக்கானிக் பிட்டர். ஏசி மெக்கானிக்
கல்வித்தகுதி
10வது, 12வது டிப்ளமோ படிப்பு அல்லது கலை அறிவியல் பிரிவில் டிகிரி பட்டம்
ஓராண்டு தொழிற்பிரிவுகள்
இன்டீரியர்டிசைன் அண்ட் டெக்கரேஷன். டிரோன் பைலட் (ஆறு மாத தொழிற்பிரிவு)
கல்வித்தகுதி
10வது, 12வது டிப்ளமோ படிப்பு அல்லது கலை அறிவியல் பிரிவில் டிகிரி பட்டம்
தனியார் நிறுவனத்தோடு இணைந்து தொழிற்பயிற்சி
தமிழ்நாடு அரசு TATA டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் உயர் தொழில் நுட்பத்துடன் (Industry 4.0 Technology Centre) கூடிய ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்ப மையம் (தொழில் 4.0)
ஓராண்டு தொழிற்பிரிவுகள்
Industrial Robotics & Digital Manufacturing Technician
கல்வித்தகுதி
10வது, 12வது டிப்ளமோ படிப்பு அல்லது கலை அறிவியல் பிரிவில் டிகிரி பட்டம்
ஈராண்டு தொழிற்பிரிவுகள்
Mechanic Electric Vehicle, Basic Designer & Virtual Verifier (Mechanical Advanced CNC Machining Technician
கல்வித்தகுதி
10வது, 12வது டிப்ளமோ படிப்பு அல்லது கலை அறிவியல் பிரிவில் டிகிரி பட்டம்
உதவித்தொகையோடு தொழிற்பயிற்சி
மேற்காணும் பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில்நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.750/- உதவித்தொகை, விலையில்லா NIMI பாடப்புத்தகங்கள். வரைபடக் கருவி. 2 செட் சீருடைகள் (தையல் கட்டணத்துடன்.) பஸ் பாஸ். ஷூ ஆகியவை தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.
மேலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்படி மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதே போல பெண் பயிற்சியாளருக்கு புதுமைப் பெண் திட்டத்தின் படி மாதம் ரூபாய் 1000/- அரசால் வழங்கப்படும். பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சி நிலைய வளாகத்தில் தங்கி பயில விடுதி வசதி உண்டு.
விண்ணப்பிக்க அழைப்பு
நேரடி சேர்க்கைக்கு துணை இயக்குநர் / முதல்வர். அரசினர் ஐடிஐ, வடசென்னை (மிண்ட்). முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இப்படிப்பில் சேர்வதற்கு பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.08.2024, படிப்பு தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண். 9894192652 அறிவிக்கப்பட்டுள்ளது.