சந்திரமுகி 2 முதல் இறைவன் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? முழு லிஸ்ட் இதோ
சந்திரமுகி 2 முதல் இறைவன் வரை இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தியேட்டர் ரிலீஸ் படங்கள்
செப்டம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே குஷி, ஜவான் என பான் இந்தியா படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தற்போது செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் மூன்று முக்கிய தமிழ் படங்கள் தியேட்டரில் ரிலீஸாக உள்ளன. இதுதவிர ஓடிடியிலும் ஏராளமான தமிழ் படங்கள் ரிலீசுக்கு வரிசைகட்டி காத்திருக்கின்றன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சந்திரமுகி 2
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. இப்படத்தில் சந்திரமுகியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் மகிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஆஸ்கர் விருது வென்ற மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இறைவன்
ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, உதயநிதி ஸ்டாலினின் மனிதன் போன்ற படங்களை இயக்கிய அஹமத் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் இறைவன். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படமும் செப்டம்பர் 28-ந் தேதி திரைகாண உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சித்தா
விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் சித்தா. இப்படத்தில் சித்தார்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் இப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது. இப்படம் செப்டம்பர் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
ஓடிடி ரிலீஸ் படங்கள்
ஓடிடியை பொறுத்தவரை வருகிற செப்டம்பர் 29-ந் தேதி ஜிவி பிரகாஷ்குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான அடியே, சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. அதேபோல் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா ஹாட்ஸ்டாரிலும், சந்தானம் நடித்த கிக் சிம்ப்ளி சவுத் ஓடிடியிலும் செப்டம்பர் 29-ந் தேதி வெளியாக உள்ளன. ஹர்காரா படம் ஆஹா ஓடிடி தளத்தில் செப்டம்பர் 29-ல் வெளிவர உள்ளது. சமந்தா, விஜய் தேவரகொண்டா நடித்த குஷி திரைப்படம் அக்டோபர் 1-ந் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... வனிதா அக்காவா இது... வெளிநாட்டில் பார்ட்டிக்கு சென்ற 50 வயது பியூட்டி அனிதா விஜயகுமாரின் கார்ஜியஸ் போட்டோஸ்