RAIN ALERT : வெளியே போறீங்களா.. குடை எடுத்துட்டு போக மறந்துடாதீங்க- மழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனிடையே ஆலந்தூர், அரக்கோணம், கும்பிடிப்பூண்டி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
chennai rains
தமிழகத்தில் மழை எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இடி மின்னலோடு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மழை பெய்யுமா.?
நாளை (06.8.2024 மற்றும் 07.08.2024 ) நாளை மறுதினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
Tamilnadu Heavy Rain: இந்த 8 மாவட்டங்களில் ஏடாகூடமாக மழை ஊத்தப்போகுதாம்.. வானிலை மையம் சொன்ன தகவல்!
Heavy rain up
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
காலையிலும் மழை தொடரும்
இதனிடையே அடுத்த 4 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் படி ஆலந்தூர், அரக்கோணம், கும்பிடிப்பூண்டி, காஞ்சிபுரம், குன்றத்தூர், பொன்னேரி, ஶ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருவொற்றியூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.
Power Shutdown : இன்றைய மின் தடை.! சென்னையில் இத்தனை இடங்களில் மின் தடையா.? உங்க ஏரியா இருக்கா.?