குடையை மறக்காதீங்க மக்களே.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?
மதுரை, அரியலூர், கடலூர், நாகை, சேலம், புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TN Weather Update
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
Tamil Nadu Rain
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
TN Rains
மேலும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
Tamilnadu weather report
இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் மதுரை, அரியலூர், கடலூர், நாகை, சேலம், புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகைகளை விற்க போறீங்களா.. இனிமேல் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நோட் பண்ணிக்கோங்க..