என்ன.. பொசுக்குன்னு அடிச்சுட்டாங்க.. பொது இடங்களில் கன்னத்தில் அறை வாங்கிய பிரபலங்கள்!!
பொது இடங்களில் பிரபலங்கள் அறை வாங்கிய சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாலிவுட், ஹாலிவுட் மற்றும் டிவி நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர். அது சில நேரங்கள் நல்ல விஷயங்களுக்காகவும், சில சமயங்களில் சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும். பல நேரங்களில் நமக்கு இலக்குகளைத் தரும் நட்சத்திரங்கள், சில சமயங்களில் சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த வகையில் பொது இடங்களில் அறை வாங்கிய 5 சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீபத்தில் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தை CISF கான்ஸ்டபிள் அறைந்தார். விவசாயிகளை தரக்குறைவாக பேசியதற்காக கங்கனாவை அந்த கான்ஸ்டபிள் அறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் சமீபத்தில் சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டார்.
will smith
2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி ராக் கேலி செய்ததை அடுத்து, வில் ஸ்மித் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்தார். இதுதொடர்பான போட்டோகளும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானதை அடுத்து இது பேசு பொருளாக மாறியது.
gauahar khan
2014 ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பின் போது பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான கௌஹர் கானை அங்கிருந்த பார்வையாளர்கள் கன்னத்தில் அறைந்தனர்..
Armaan Malik
பிக் பாஸ் OTT 3 இன் சமீபத்திய எபிசோடில், அர்மான் மாலிக் விஷால் பாண்டேவை அறைந்தார். இது தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. மேலும் இந்த விவகாரம் இணையத்தில் பேசு பொருளாக மாறியது..
esha deol
நடிகை ஈஷா தியோல் ஒருமுறை அமிர்தா ராவை பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தார். ஈஷா குறித்து அவதூறாக பேசியதால் அவர் அமிர்தா ராவை அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.