30 நாள்தான் உங்களுக்கு டைம்! அனைத்து மெடிக்கல் ஷாப்களில் சிசிடிவி கட்டாயம்! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!
மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்கள் அதிகளவிற்கு மனநல சிகிச்சைகள் சார்ந்த தூக்கம் தரும் போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை உட்கொண்டு வருவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது. இதனை தடுக்கும் விதமாக மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது சிறார்கள் போதைக்கு அடிமையாவதை கட்டுப்படுத்த எந்தவித மருத்துவர் பரிந்துரைகள் இன்றி அதிகளவிற்கு தூக்கம் தரும் மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- மதுரை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம்- 1940 மற்றும் விதிகள் 1945 அட்டவணைகள் "X" and மன நல சார்ந்த சிகிச்சைகள் தொடர்பான 'H', 'H1'Drugs" குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1973 பிரிவு 133 இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய நாளில் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் கடைகளில் பொருத்தப்பட வேண்டும்.
தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களில் உரிமையாளர் மீது மேற்கண்ட உத்தரவினை பின்பற்றாததிற்காக உரிய சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.