MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி! கார் விபத்துக்கு இதுதான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்!

சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி! கார் விபத்துக்கு இதுதான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்!

திருத்தணி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Aug 12 2024, 07:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Car Accident

Car Accident

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள ராமஞ்சேரி சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 7 கல்லூரி மாணவர்கள் சென்னை நோக்கி காரில் வேகமாக வந்துக்கொண்டிருந்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலம் சென்றுகொண்டிருந்த கனரக லாரி மீது எதிர்பாராத விதமாக கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
College Student

College Student

அதில் பயணம் செய்த 7 கல்லூரி மாணவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக உடனே அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை? வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

34
SRM College Student

SRM College Student

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் பிரகாசம் மாவட்டங்களை சேர்ந்த 7 பேரும் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் சிஎஸ்சி டேட்டா சயின்ஸ் (கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்) 3ம் ஆண்டு படித்து வந்தது தெரியவந்தது. அவர்கள் விடுமுறை நாளான நேற்று காரில் திருவண்ணாமலை மற்றும் ஆந்திராவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பும் போது அதிவேகமாக காரை இயக்கியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது நேருக்கு நேர் அதி வேகத்தில் மோதியதும் தெரியவந்தது.

44
Police investigation

Police investigation

இந்த விபத்தில் திருப்பதியை சேர்ந்த சேத்தன்(21), யுகேஷ்(21), ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த நிதீஷ்(21), நிதீஷ்வர்மா (21), ராம்கோபால்(21) ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பதியை சேர்ந்த விஷ்ணு(21), பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த சைதன்யா(21) ஆகியோர் படுகாயமடைகளுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயிலுக்கு சென்று திரும்பியபோது கார் லாரி மீது மோதிய விபத்தில் ல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved