பிரம்மாண்டமாக தொடங்கிய டி20 உலகக் கோப்பை 2024: மாஸ் காட்டிய கனடா 194 ரன்கள் குவிப்பு!
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா அணிக்கு எதிராக முதலில் விளையாடிய கனடா 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்துள்ளது.

United States vs Canada, 1st Match,
கனடா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா கேப்டன் மோனாங்க் படேல் பவுலிங் தேர்வு செய்தார்.
United States vs Canada, 1st Match,
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று டல்லாஸில் தொடங்கியது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா கேப்டன் மோனாங்க் படேல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய கனடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.
United States vs Canada, 1st Match,
ஆரோன் ஜான்சன் மற்றும் நவ்னீத் தலிவால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். இதில் ஜான்சன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பர்கத் சிங் 5 ரன்களிலும், தலிவால் அதிரடியாக விளையாடி 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
United States vs Canada, 1st Match,
அதன் பிறகு வந்த நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்கள் எடுத்தார். தில்ப்ரீத் சிங் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் மோவ்வா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக கனடா அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.
United States vs Canada, 1st Match,
பவுலிங்கைப் பொறுத்த வரையில் அலி கான், ஹர்மீத் சிங், சிஜே ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அமெரிக்கா:
மோனாங்க் படேல் (கேப்டன், விக்கெட் கீப்பர்) ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கோஸ், ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டெர்சன், ஹர்மீத் சிங், நிதிஷ் குமார், ஷாட்லி வான் ஷால்வ்க், அலி கான், ஜஸ்தீப் சிங், சௌரவ் நெட்ரவால்கர் மிலிண்ட் குமார், நிசார்க் படேல், நோஷ்துஷ் கெஞ்சிஜே, ஷயன் ஜஹாங்கிர்.
கனடா:
ஷ்ரேயாஸ் மோவ்வா (விக்கெட் கீப்பர்), சாட் பின் ஜாஃபர் (கேப்டன்), நவ்னீத் தலிவால், ரய்யான் பதான், நிக்கோலஸ் கிர்தன், தில்ப்ரீத் சிங், ரவிந்தர்பால் சிங், திலியன் ஹெலிங்கர், ஜெரெமி கோர்டன், ரிஷிவ் ராகவ் ஜோஷி, ஜுனைத் சித்திக், பர்கத் சிங், நிகில் டட்டா, கலீல் சனா.