- Home
- Gallery
- மிதுன ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்; இந்த 3 மூன்று ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்..!!
மிதுன ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்; இந்த 3 மூன்று ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்..!!
கிரகங்களின் ராஜாவான சூரியன் மற்றும் புதன் இணைந்து மிதுன ராசியில் புதாதித்ய ராஜயோகம் உருவாக்கப் போகிறார்கள். இதனால், 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கப் போகிறது.

ஜோதிட சாஸ்திரப்படி, ஜூன் 14ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையும். மறுநாள், அதாவது ஜூன் 15ஆம் தேதி சூரியனும் மிதுன ராசியில் நுழைகிறார். இதனால் அங்கு சூரியன்-புதனின் புதாதித்ய ராஜயோகம் உருவாகப் போகிறது.
இந்த ராஜயோகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. அவர்களுடைய நல்ல நாட்கள் தொடங்கப் போகிறது.
மிதுனம்: புதாதித்ய ராஜயோகத்தால், மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது. திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் இந்த நேரத்தில் நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றியை காண்பீர்கள்.
இதையும் படிங்க: குரு உச்சம்..கொடிகட்டி பறக்க போகும் டாப் 3 ராசிகள்.. லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களா.?!
கன்னி: புதாதித்ய ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனையும் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் விரைவில் கிடைக்கும். உங்களது பொருளாதார நிலை மேம்படும். மற்றும் உங்களுக்கு வருமான ஆதாரங்கள் பெருகும். கடனில் இருந்தால் அதிலிருந்து நிம்மதி கிடைக்கும்.
இதையும் படிங்க: Rasi Palan : இந்த 4 ராசிக்காரங்கள மட்டும் கல்யாணம் பண்ணாதீங்க.. இல்லனா ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க!
கும்பம்: கும்ப ராசிக்காரர்களும் புதாதித்ய ராஜயோகத்தால் சாதகமான தாக்கம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியை காண்பீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால், நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களது மனம் மகிழும் வகையில் வியாபாரம் நடக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D