365 நாட்கள்.. சிம்மத்தில் உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்; இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்டசாலிகள்!!
Budhaditya Raja Yoga 2024 : சிம்மத்தில் ஏற்கனவே புதன் இருக்கும் நிலையில், விரைவில் சூரியனும் சிம்ம ராசியில் பிரவேசிக்க போவதால், புதாதித்ய யோகம் உருவாகப்போகிறது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
ஜோதிடத்தின்படி, கிரகங்களின் அரசன் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாகும். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொள்ளும் போது தமிழ் மாதம் பிறக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சூரியன் ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைகிறது. இதனால் பல ராசிகளின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படும்.
அதுமட்டுமின்றி, இந்த ராசியில் புதன் கிரகம் ஏற்கனவே இருப்பதால், புதனுடன் சூரியன் இணைவதால் சக்தி வாய்ந்த புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு புதாதித்ய யோகம் மிகுந்த பலன்களை தரும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். தைரியமும், நம்பிக்கையும் நிறைந்திருக்கும். இவர்கள் ஒவ்வொரு துறையிலும் வெற்றியுடன், நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதால் அதிக லாபம் கிடைக்கும்.
இதையும் படிங்க: மிதுனம் செல்லும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஜொலிக்க போகுது!
மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புதாதித்ய யோகம் நல்ல பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் வெற்றியை காண்பார்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அபரிதமான நிதி ஆதாரங்கள் கிடைக்கும். இதனுடன் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
இதையும் படிங்க: வீட்டில் தங்கத்தை எந்த இடத்தில் வைத்தால் அள்ள அள்ள பெருகும்.. வாஸ்து டிப்ஸ் இதோ!!
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த புத்தகத்தை யோகம் சாதகமான பலன்களை தரும். ஒவ்வொரு துறையிலும் வெற்றியுடன் நிதி நன்மைகளையும் பெறுவீர்கள். உங்கள் தொழில் வெளிநாட்டில் இருந்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு நினைவாகும். நிதிநிலைமை நன்றாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D