MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "தெய்வமே தோற்கும் அப்பா அன்பின் முன்" நிரூபித்த நெப்போலியன் - மகன் தனுஷுக்காக என்னெல்லாம் செய்தார் தெரியுமா?

"தெய்வமே தோற்கும் அப்பா அன்பின் முன்" நிரூபித்த நெப்போலியன் - மகன் தனுஷுக்காக என்னெல்லாம் செய்தார் தெரியுமா?

Dhanoosh Napoleon : பிரபல நடிகர் மற்றும் முன்னாள் அமைச்சருமான நெப்போலியன் அவர்களின் மூத்த மகன் தனுஷ் அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் ஜோராக நடந்து வருகின்றது.

2 Min read
Ansgar R
Published : Jul 09 2024, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Actor Nepolean movies

Actor Nepolean movies

திருச்சியில் பிறந்து, அங்கேயே தனது கல்லூரி படிப்பை முடித்த நடிகர் தான் நெப்போலியன். நண்பர்கள் பலரின் தூண்டுதலால் திரைத்துறையில் காலெடுத்து வைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகராக இன்றும் நடித்து வருகின்றார் நடிகர் நெப்போலியன். 

கடந்த 1991ம் ஆண்டு வெளியான "புது நெல்லு புது நாத்து" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் திரைத்துறையில் அறிமுகமானார். அறிமுகமான வெகு சில ஆண்டுகளில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து ஒரு கட்டத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் மாநில அமைச்சராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

கல்கி 2898 ஏடி.. முதலில் தீபிகா படுகோனுக்கு பதில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா? நல்லவேள நடிக்கல..

25
nepolean america

nepolean america

ஆனால் தனது மூத்த மகனின் உடல் நலத்தை கவனத்தில்கொண்டு சொந்த நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்து, இன்று அங்கு ஒரு ஹைடெக் விவசாயியாகவும், ஆகவும் மிகப்பெரிய தொழிலதிபராகவும் விளங்கி வருகிறார் நெப்போலியன். இது அனைத்தையும் அவர் செய்ய முதல் காரணம் அவருடத மகன் தான் என்றால் அது மிகையல்ல.  

நெப்போலியனின் மகன்கள் 

கடந்த 1993ம் ஆண்டு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் உண்டு. அதில் மூத்தவர் பெயர் தனுஷ், இளைய மகன் பெயர் குணால். இருவரும் அப்பா அம்மா பேச்சை தட்டாத செல்ல பிள்ளைகள், இதில் மூத்தவர் தனுஷ் அவர்களுக்கு தான் அண்மையில் திருமண நிச்சயம் முடிந்துள்ளது.

35
jeyasudha

jeyasudha

யார் இந்த தனுஷ் நெப்போலியன்?

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு நான்கு வயது இருந்த பொழுது தான் அவருக்கு பிறப்பிலேயே தசை சிதைவு என்கின்ற நோய் இருப்பது தெரியவந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சென்று இதற்காக சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த நெப்போலிகளுக்கு, ஒரு கட்டத்தில் திருநெல்வேலி அருகே பாரம்பரிய முறைப்படி இவ்வித நோய்களுக்கு குணமளிக்கும் ஒரு இடம் இருப்பது தெரிய வந்தது. 

அங்கு சென்றதும் தனது மகனின் உடல்நிலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் கூட, சிறிய அளவில் மாற்றங்கள் இருப்பதை உணர்ந்தார். அப்போது தனது மகனுக்காக மிகப்பெரிய முடிவு ஒன்று எடுத்த நெப்போலியன், என் குழந்தைக்கு நேர்ந்த இந்த நிலை, இனி எந்த குழந்தைக்கு நிகழக்கூடாது என்று அங்கேயே மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டினார்.

45
dhanoosh nepolean

dhanoosh nepolean

ஒரு கட்டத்தில் மகனின் உடல்நிலை காரணமாக உயர் சிகிச்சைகளுக்காக தாய் நாட்டை விட்டு, அமெரிக்காவிற்கு சென்று மேல் சிகிச்சைகளுக்காக அவரை அங்கு அனுமதித்தார். பின் தன் மகனுக்காகவே அங்கு பல வசதிகளை அவர் செய்து கொடுத்தார். தனுஷ் அவர்களும் தன்னுடைய உடலில் உள்ள குறைபாட்டை ஒரு குறையாகவே கருதாமல், இன்று பல துறைகளில் சாதித்து வருகிறார். 

இன்னும் சொல்லப் போனால் நெப்போலியனின் பல முக்கிய நிறுவனங்களை கவனித்துக்கொள்வதும் இவர் தான். பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள தனுஷ் அவர்களுக்காக ஒரு தனி நிறுவனத்தையே உருவாக்கி அதில் அவர் போல குறைபாடுள்ள பல குழந்தைகளுக்கு எந்த விதம் உடல் நலத்தை சரிசெய்யலாம் என்பது குறித்த ஆராய்ச்சிகளையும் நெப்போலியன் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

55
gunal nepolean

gunal nepolean

தனது மகனுக்காக பல விஷயங்களை அவர் செய்து வரும் நிலையில், தனுஷ் நெப்போலியனுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. அவருக்கு நிச்சயம் வெளிநாட்டில் எளிமையான முறையில் முடிந்துள்ள நிலையில், சென்னை வந்த நெப்போலியன், முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தனது மகனின் திருமணம் குறித்து பேசி சென்றுள்ளார்.

Anitha Vijayakumar : விமரிசையாக நடந்த தியா - திலான் திருமணம்! பேமிலி போட்டோஸ் வெளியிட்ட விஜயகுமாரின் பேத்தி!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved