- Home
- Gallery
- நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணியா? அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த பிரதமர் மோடி..!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணியா? அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த பிரதமர் மோடி..!
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

vijayakanth
தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக கட்சி நிகழ்வில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார். இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 28ம் தேதி காலமானார்.
vijayakanth passed away
இவரது மறைவு தமிழக மக்களை கண்ணீரில் ஆழ்த்தியது. இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் அலைக்கடல் என சென்னை நோக்கி படையெடுத்தனர். சுமார் 12 லட்சம் பேர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க;- சாராய ஆலைகள் நடத்தும் திமுகவினருக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் திமுக அரசு- விளாசும் அண்ணாமலை
PM Modi
இது ஒருபுறம் இருக்க அரசு மரியாதையுடன் இறுதி சடங்கை நடத்தி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு நன்றி தெரிவித்து பிரேமலதா புகழ்ந்தது முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், திருச்சி வந்த பிரதமர் மோடி ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகையில் சில நாட்களுக்கு முன்புதான் விஜயகாந்தை இழந்தோம். சினிமா உலகில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டனாக இருந்தவர். திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர். ஒரு அரசியல்வாதியாக, அவர் எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் மேலாக தேச நலனை முன்னிறுத்தியவர். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
BJP
அதேபோல் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் எனது நெருங்கிய நண்பராக இருந்தார். அவருடன் பல்வேறு தருணங்களில் நெருக்கமாக உரையாடியும், பணியாற்றியும் உள்ளதாக குறிப்பிட்டு புகழஞ்சலி செலுத்தி தமிழக அரசியலை அதிரவைத்தார். இதனிடையே, பாஜக கூட்டணியில் அதிமுக வெளியேறியதை அடுத்து அமமுக, ஓபிஎஸ் மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க;- எதுக்கு இந்த அவசரம்! வசதிகளை ஏற்படுத்தி விட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து இருக்கலாமே? L.முருகன்!
Premalatha Vijayakanth
ஆனால் தேமுதிக இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்காமல் இருந்து வரும் நிலையில் எப்படியாவது விஜயகாந்த் மறைவு மற்றும் அதன் அனுதாபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்குகளாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. ஆகையால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவே அரசியல் வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இதுவரை தேமுதிக ஒரு எம்.பி. கணக்கை கூட தொடங்காத நிலையில் 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எம்.பி.க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி என பிரேமலதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.