MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 250 கோடி நஷ்டம்.. பிரபல ஹீரோவின் படம் பிளாப் ஆனதால் ஆபிஸையே விற்ற தயாரிப்பாளர்- ஆனா அது விஜய், பிரபாஸ் படமில்ல

250 கோடி நஷ்டம்.. பிரபல ஹீரோவின் படம் பிளாப் ஆனதால் ஆபிஸையே விற்ற தயாரிப்பாளர்- ஆனா அது விஜய், பிரபாஸ் படமில்ல

பிரபல நடிகரை நம்பி 350 கோடியில் படமெடுத்த தயாரிப்பாளருக்கு அப்படத்தால் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதால் அவர் ஆபிஸையே விற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

2 Min read
Ganesh A
Published : Jun 24 2024, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Akshay Kumar

Akshay Kumar

சினிமா ஒருவனை ஹீரோவாகவும் ஆக்கும் ஜீரோவாகவும் ஆக்கும். பெரிய நடிகர்களை நம்பி பல கோடிகளை வாரி இறைத்து படத்தை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அப்படம் பிளாப் ஆனால் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விடுவர். அப்படி சினிமாவில் கோட்டைவிட்ட தயாரிப்பாளர்கள் ஏராளம். அந்த வரிசையில் புதிதாக ஒரு தயாரிப்பாளர் இணைந்திருக்கிறார். ஒரு டாப் ஹீரோவை நம்பி 350 கோடியில் படம் எடுத்த அவருக்கு ரூ.250 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

24
Tiger Shroff, Akshay Kumar

Tiger Shroff, Akshay Kumar

அவர் வேறுயாருமில்லை பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பக்னானி தான். இவர் ஒரு காலத்தில் ஸ்டார் ஹீரோவான கோவிந்தாவை வைத்து கூலி நம்பர் 1, ஹீரோ நம்பர் 1 போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவரது தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் '‘படே மியான் சோட்டே மியான்’. இப்படம் தான் தயாரிப்பாளர் வாசு பாக்னானி, தற்போது கடனில் தள்ளி உள்ளதோடு ஆபிஸையே அவர் விற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... கருடன் பட இயக்குனருடன் கூட்டணி... அடுத்த படத்துக்காக ஆளே டோட்டலாக மாறிய லெஜண்ட் சரவணன் - நியூலுக் போட்டோஸ் இதோ

34
Bade Miyan Chote Miyan

Bade Miyan Chote Miyan

இந்தியாவின் மிகப்பெரிய தோல்வி படமாக படே மியான் சோட்டே மியான் மாறி உள்ளது. அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் போன்ற டாப் ஹீரோக்கள் நடித்த இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கி இருந்தார். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தது. வெறும் ரூ.90 கோடி மட்டுமே வசூலித்த இப்படத்தால், அதன் தயாரிப்பாளர் வாசு பாக்னானிக்கு ரூ.250 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

44
Bade Miyan Chote Miyan Movie Loss

Bade Miyan Chote Miyan Movie Loss

இது தவிர சமீப காலமாக இவரது தயாரிப்பில் வெளியாவந்த கன்பாத், பெல் பாட்டம் போன்ற படங்களும் தோல்வி அடைந்தன. படே மியான் சோட்டே மியான் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மும்பையில் உள்ள தனது ஏழு மாடி அலுவலகத்தை விற்றிருக்கிறார் வாசு. மேலும் இப்படத்தில் பணியாற்றிய பலருக்கு பேசப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லையாம். அலுவலகத்தை விற்றுவிட்டதால் அங்கு பணியாற்றி வந்த 80 சதவீதம் பேரை வேலை இழந்துள்ளனர். இப்படி மாபெரும் தோல்வி படத்தை கொடுத்த அக்‌ஷய் குமார் அடுத்ததாக சூர்யா தயாரிப்பில் சர்பிரா என்கிற படத்தில் நடித்துள்ளார். சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் ஆன இது வருகிற ஜூலை 12ந் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Sonakshi Sinha: சிவப்பு நிற பட்டு புடவையில்... வெட்க புன்னகையோடு கணவருடன் போஸ் கொடுத்த சோனாக்ஷி சின்ஹா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved