- Home
- Gallery
- நயன் - விக்கிக்கே டஃப் கொடுப்பங்க போல.. கணவருடன் ஃபாரீன் டூர்.. ஸ்டைலாக மாறி அசர வைத்த பிக்பாஸ் தாமரை..
நயன் - விக்கிக்கே டஃப் கொடுப்பங்க போல.. கணவருடன் ஃபாரீன் டூர்.. ஸ்டைலாக மாறி அசர வைத்த பிக்பாஸ் தாமரை..
பிக்பாஸ் தாமரை செல்வி தனது கணவருடன் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு கிளம்பிய நிலையில், அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நாடக கலைஞராகவும், தெருக்கூத்து கலைஞராகவும் இருந்த தாமரை செல்வி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ராஜு ஜெயமோகன், பிரியங்கா, நிரூப், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
thamarai
இதில் பங்கேற்ற தாமரை செல்வி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய கடைசி வரை முன்னேறினார். பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதே போல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல வருமானம் ஈட்டி வந்தார்.
bb 5
இதை தொடர்ந்து தாமரை செல்விக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணமா சீரியலில் நடித்தார். அதன்பின்னர் தற்போது பல சீரியல்களிலும் அவர் நடித்து வருகிறார். மேலும் தனியாக யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் அவர், அதில் சமையல் வீடியோ உள்ளிட்ட பல வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு தனது சொந்த ஊரான புதுவீட்டை கட்டிய தாமரை செல்வி, தனது வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு சில பிரபலங்களையும் அழைத்திருந்தார். இதுதொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் தனது கணவர் பார்த்தசாரதி உடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார் தாமரை செல்வி. சென்னை விமானநிலையத்தில் தனது கணவருடன் எடுக்கப்பட்ட போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” One life, one world, explore it” அதாவது ஒரு வாழ்க்கை, ஒரு உலகம் அதனை கண்டு ரசியுங்கள் என்று கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஸ்ட்ரெயிட்டனிங் பண்ண ஹேர், கார்கோ பேண்ட் டிஷர்ட் என ஆளே மாறி போயி படு ஸ்டைலாக இருக்கிறார் தாமரை செல்வி. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரின் அசுர வளர்ச்சியை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் அவரின் வாழ்க்கையை மாற்றிவிட்டது என்றும் பதிவிட்டு வருகின்றன. இன்னும் சிலரோ தாமரை செல்வியை கிண்டல் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.