- Home
- Gallery
- மகளை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு.. ஷகீலா வீட்டில் பார்ட்டி கொண்டாடிய வனிதா - வைரலாகும் போட்டோஸ்
மகளை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு.. ஷகீலா வீட்டில் பார்ட்டி கொண்டாடிய வனிதா - வைரலாகும் போட்டோஸ்
நடிகை ஷகீலா வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார், தோழிகளுடன் பார்ட்டியை கொண்டாடி உள்ளார்.

vanitha, shakeela
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் செம்ம பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் வனிதா, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தன் மகளை போட்டியாளராக களமிறக்கிவிட்டார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் வாரத்திலேயே விசித்ராவுடன் மல்லுக்கட்டிய ஜோவிகா, சோசியல் மீடியா டிரெண்டிங்கில் இடம்பிடித்தார்.
jovika vanitha
ஆரம்பத்தில் சரவெடியாய் வெடித்த ஜோவிகா, பின்னர் மாயாவின் புல்லி கேங்கில் இணைந்த பின்னர் புஷ்வானமாக மாறினார். ஒருகட்டத்தில் சாப்பிடுவது, தூங்குவது என ரிப்பீட் மோடில் இதைமட்டுமே செய்துவந்த ஜோவிகாவின் விளையாட்டு போர் அடித்ததால் அவரை மக்கள் வெளியேற்றினர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் ஜோவிகா.
இதையும் படியுங்கள்... பரணியை மிரட்டிய பாண்டியம்மா... வேல் எடுத்து குத்த வந்த ஷண்முகம் - அடுத்தடுத்த டுவிஸ்ட் உடன் அண்ணா சீரியல்
Jovika
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளதால் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் கெஸ்ட் ஆக பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சென்று இருக்கிறார். இதனால் பிக்பாஸ் வீடே மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறது.
vanitha at shakeela birthday party
மகள் ஜோவிகாவை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த கையோடு, நடிகை ஷகீலா வீட்டுக்கு சென்ற வனிதா, அவரின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். ஷகீலா வைத்த அந்த சர்ப்ரைஸ் பார்ட்டியில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா. அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Sun Tv Serial: முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்! 'அருவி' சீரியலில் ஏற்படும் முக்கிய மாற்றம்?