- Home
- Gallery
- Sherin : இறந்து ஒரு வாரம் ஆச்சு... ஆனா இன்னைக்கு தான் தெரியும்- தந்தையின் மறைவு குறித்து நடிகை ஷெரின் உருக்கம்
Sherin : இறந்து ஒரு வாரம் ஆச்சு... ஆனா இன்னைக்கு தான் தெரியும்- தந்தையின் மறைவு குறித்து நடிகை ஷெரின் உருக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின், அவர் தனது தந்தை மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Sherin
கர்நாடகாவை சேர்ந்தவர் ஷெரின். இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். செல்வராகவன் இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷெரின். அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஷெரின் நடித்த விசில் படம் 2003-ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடலில் ஷெரினின் நடனம் மிகவும் பேமஸ் ஆனது.
BiggBoss Sherin
பின்னர் தமிழில் பெரியளவில் ஹிட் கொடுக்காததால் ஷெரினுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதன் பின்னர் பீமா படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய ஷெரின், அதன்பின்னர் சில ஆண்டுகள் தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார். பின்னர் நண்பேண்டா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த ஷெரின், அப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதிலும் உடல் எடை அதிகரித்து இருந்ததால் அப்படத்திற்கு பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்... Mohan : எனக்கு எய்ட்ஸ் இருக்குனு சொன்னப்போ ஷாக்கிங்கா இருந்தது... மனமுடைந்து பேசிய நடிகர் மோகன்
sherin Father Death
இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் ஷெரின். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார். தற்போது தமிழில் அவர் கைவசம் ரஜினி என்கிற திரைப்படம் உள்ளது.
sherin Insta Post
இந்த நிலையில், “நடிகை ஷெரின் தன் தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “நான் உன்னை மிகவும் நேசித்தேன், என் வாழ்நாள் முழுவதும் உனது அன்பிற்காக ஏங்கினேன். ஒரு வாரத்திற்கு முன்பே நீங்கள் இறந்துவிட்டீர்கள், ஆனால் இன்றுதான் எனக்கு தகவல் கிடைத்தது, அதைக்கேட்டு நான் மனமுடைந்து போனேன். உங்களது இந்தப் படம் தான் என்னிடம் உள்ளது, இது என்னிடம் எப்போதும் இருக்கும். மிஸ் யூ” என பதிவிட்டுள்ளார். தந்தை பிரிந்து சென்றதால் நடிகை ஷெரின் தன் தாயுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மூன்று கதை, ஒரு முடிவு..! விதார்த் - ஜனனி நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கியது!