- Home
- Gallery
- நான் தோத்துட்டேன்.. திடீரென சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த பாலாஜி முருகதாஸ்.. இதுதான் காரணமாம்..
நான் தோத்துட்டேன்.. திடீரென சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த பாலாஜி முருகதாஸ்.. இதுதான் காரணமாம்..
ஃபயர் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வந்த பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், திடீரென சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

Balaji Murugadoss
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் 2-வது இடம் பிடித்த அவர், பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் அனார்.
Balaji Murugadoss
இதை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.
Balaji Murugadoss
இந்த நிலையில் ஜே.சதீஸ்குமார் இயக்குனராக அறிமுகமான ஃபயர் என்ற படத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்து வந்தா. இந்த படத்தில் ரக்ஷிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர்.
Balaji Murugadoss
இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
Balaji Murugadoss
இந்த நிலையில் ஃபயர் படத்தில் லீட் ரோலில் நடித்த பாலாஜி முருகதாஸ், தான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஃபயர் என்ற படத்தில் நான் நடித்திருந்தேன்.. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளமாக தரவில்லை. நான் சினிமாவை விட்டு விலகுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.