இந்த அறிவு கமலுக்கு இல்லாம போச்சே? ஆண்டவருக்கு எதிராகவும்.. பிரதீபுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த சினேகன்!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம், போட்டியாளர்கள் சிலர் பிரதீப்புக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்காக அவருக்கு கமல் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது குறித்து சினேகன் பேசியுள்ளதற்கு பலர் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
BB Tamil 7
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போர் அடிக்காமல் இருக்க காரணமாக இருந்தவர்களில் பிரதீப்பும் ஒருவர். மேலும் இவர் என்ன சேட்டைகள் செய்தாலும், இதுவரை நிகழ்ச்சியை பார்த்து வரும் மக்கள் பலர் தொடர்ந்து பிரதீப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதேசமயம் பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் சிலரும், பிரதீப்புக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பிரபல பாடகரும், கமல்ஹாசன் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் கவிஞர் சினேகன், பிரதீப்பின் ரெட் கார்டு கொடுத்த விவகாரம் குறித்து பேசி உள்ள தகவல் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.
சினேகன் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து தன்னுடைய பேட்டியில் சினேகன் கூறி உள்ளதாவது, பிக் பாஸ் வீட்டில் பிரதீப் தவறாக பேசுவதற்கு, நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதேநேரம் இந்த மைண்ட் கேம்மில் ஒரு மனிதன் தடுமாறுவது என்பது மிகவும் இயல்பான ஒன்று.
Bigg Boss Pradeep
மேலும் ரெட் கார்டு கொடுத்த அன்றைய தினம், பிரதீப்பின் முகத்தில் தனக்காக பேசுவதற்கு யாருமே இல்லை என்கிற ஏக்கம் தெரிந்தது. சக போட்டியாளர்கள் முன்பு, கூனிக்குறுகி நின்றதோடு, கசக்கி தூக்கி எறியப்படும் ஒரு நபராகவே அவர் நிலைகுலைந்து நின்றார். அந்த சமயத்தில் தன்னுடைய பக்கம் உள்ள நியாயதை கூட, அவரால் பேச முடியவில்லை. ஊரே சேர்ந்து ஒருத்தரை உதைத்து கீழே தள்ளி விடுவது போல் பிரதீப்பின் மனநிலை இருந்ததாக பேசியுள்ளார்.
Red Card Pradeep
அந்த சமயத்தில், பிரதீப்பின் பக்கம் இருந்த நியாயத்தை எடுத்து பேசி, அவருக்கு ரெட் கார்டுட் கொடுப்பதை விட வார்னிங் கொடுத்து அவரை விளையாட அனுமதி இருக்க வேண்டும் என்றும், கமலஹாசன் முடிவு தவறு என்பதை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
kamalhaasan
சினேகனுக்கு இருக்கும் இந்த அறிவு கூட கமலஹாசனுக்கு இல்லாமல் போய் விட்டதா? என்றும், எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் பொதுவான நிலைப்பாட்டில் இருக்க வேண்டிய கமல் தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக தடுமாறி, தவறான முடிவை எடுத்து விட்டதாகவும் மக்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கமலஹாசனின் கொள்கைகள் பிடித்து அவருடைய கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் சினேகன், துணிந்து தன்னுடைய கருத்தை கூறியுள்ளதற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D