- Home
- Gallery
- Divorce: திருமணமான நான்கே வருடத்தில் விவாகரத்தை அறிவித்த பிக்பாஸ் பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Divorce: திருமணமான நான்கே வருடத்தில் விவாகரத்தை அறிவித்த பிக்பாஸ் பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான சந்தன் செட்டி அவரது மனைவி நிவேதிதாவிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள தகவல், இவர்களது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமீப காலமாகவே பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று பிரியும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி தங்களின் விவாகரத்தை அறிவித்தனர். இதை தொடர்ந்து, சமீபத்தில் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி விவாகரத்து குறித்து அறிவித்த நிலையில், தற்போது கன்னட நட்சத்திர தம்பதி தங்களின் விவாகரத்தை உறுதி செய்துள்ளனர்.
Chandan Shetty Niveditha Gowda
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பன்முக திறமையாளராக விளங்கும் சந்தன் செட்டி மற்றும் அவருடைய மனைவி நடிகை நிவேதிதா இருவரும், 2020-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், நான்கே வருடத்தில் தங்களுடைய விவாகரத்தை அறிவித்துள்ளனர்.
Niveditha Gowda Chandan Shetty
சந்தன் செட்டி, கன்னடா திரையுலகில் மிகவும் பிரபலமான இளம் நடிகராக இருப்பதோடு மட்டும் இன்றி, இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர், என பன்முக திறமையோடு வலம் வருகிறார். இவர் பிக் பாஸ் சீசன் 5 கன்னட நிகழ்ச்சிகளும் பங்கேற்று பிக் பாஸ் டைட்டிலை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Chandan Shetty Suthradaari
இவரும் கன்னட நடிகை நிவேதிதாவும், கன்னட திரை உலகமே பார்த்து பொறாமை கொள்ளும் வகையில் அந்யோனியமான ஜோடிகளாக வலம் வந்த நிலையில் தற்போது விவாகரத்தை அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் அவர்களது ரசிகர்களை பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தற்போது நிவேதிதா தனது instagram பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அவரது பதிவில் நானும், சந்தன் செட்டியும் நல்ல புரிதலோடு இந்நாளில் எங்களது திருமணத்தை சட்டரீதியாக முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளோம். ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையின் முடிவுக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு திசையில் சென்றாலும் ஒருவர் மீது மற்றொருவர் அக்கரையாக எப்போதுமே இருப்போம். உங்களின் ஆதரவு எங்களுடைய இந்த கடினமான காலகட்டத்தை கடக்க உதவி செய்யும் என்று நம்புகிறேன் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நட்சத்திர ஜோடி பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் தங்களுடைய விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.