- Home
- Gallery
- மனசு ரொம்ப கஷ்டமா இருந்தா! ஆம்ஸ்ட்ராங்கைத்தான் போய் பார்ப்பேன்! கண்ணீர் மல்க பிக்பாஸ் பிரபலம் சொன்ன தகவல்!
மனசு ரொம்ப கஷ்டமா இருந்தா! ஆம்ஸ்ட்ராங்கைத்தான் போய் பார்ப்பேன்! கண்ணீர் மல்க பிக்பாஸ் பிரபலம் சொன்ன தகவல்!
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என இசைவாணி கூறியுள்ளார்.

Armstrong Murder
சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் தனியார் உணவு டெலிவரி உடையில் வந்த மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் தப்பித்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
Armstrong Murder News
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என திருமாவளவன், செல்வப்பெருந்தனை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
BSP Party Armstrong News
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அயனாவரம் இல்லத்துக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் இன்று காலை செம்பியம் பந்தர் கார்டன் பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Isaivani Vs Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிஸ்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவரும் கானா பாடகியுமான இசைவாணி ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கானா பாடல்களை பாடி கதறி அழுதார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசைவாணி: ஒருவருக்கு உதவி செய்துவிட்டு அதனை யாரிடமும் சொல்லக்கூடாது எனக் கூறுவார். இதுவரை 800க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார்.
Isaivani
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலமை என்றால் சாதாரண மக்களின் நிலை. எனக்கு தனிப்பட்ட முறையில் அவர் எவ்வளவோ உதவி செய்திருக்கின்றார். மனதளவில் எப்போதாவது சோர்வாக உணர்ந்தால் உடனே நான் இவரைத்தான் வந்து பார்ப்பேன். அவர் எனக்குச் சொல்வது, நீ இன்னும் வளரனும், மனதளவில் வளரவேண்டும் என்பார். கோபப்படவே மாட்டார். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது நீண்ட ஆசை. ஆனால் இடத்தில் வைத்து துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது என கண்ணீர் மல்க கூறினார்.