- Home
- Gallery
- குற்றவாளி கூண்டில் ஷண்முகம்! பாக்கியத்தின் பதிலால் நடந்த ட்விஸ்ட்? அண்ணா சீரியல் அப்டேட்!
குற்றவாளி கூண்டில் ஷண்முகம்! பாக்கியத்தின் பதிலால் நடந்த ட்விஸ்ட்? அண்ணா சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தின் தங்கைகளும் வைகுண்டமும் சௌந்தரபாண்டி காலில் விழுந்து கெஞ்ச அவர் சண்முகத்தை காப்பாற்ற முடியாது என்று துரத்தி விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Anna serial
அதாவது, மீண்டும் பரணியிடம் கெஞ்ச அவள் ஷண்முகம் இனிமே அருவாள் எடுக்க மாட்டேன்னு சொல்ல சொல்லுங்க நான் அம்மாவிடம் பேசுறேன் என்று சொல்கிறாள், ஷண்முகம் என்னால் அப்படி சொல்ல முடியாது. என்ன நடந்தாலும் சரி அதை நான் பார்த்துகிறேன் என்று சொல்கிறான்.
Anna Serial
இதையடுத்து கோர்ட்டுக்கு எல்லாரும் வந்து சேர்க்கின்றனர். பாக்கியத்தையும் அழைத்து வர அவள் சண்முகத்தை பார்க்க ஷண்முகம் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். எல்லாரும் பாக்கியம் சொல்ல போவது என்ன என்ற பதற்றத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Anna serial
அடுத்ததாக நீதிமன்றம் கூடுகிறது, ஷண்முகத்தையும் பாக்கியத்தையும் கூண்டில் ஏற்றி விசாரணையை தொடங்குகின்றனர். முதலில் பாக்கியத்திடம் நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்திய வாக்குமூலம் வாங்கி கொண்டு விசாரணையை தொடங்குகின்றனர்.
Anna serial
கத்தி குத்து சம்பவத்தில் நடந்தது என்ன என்று கேட்க பாக்கியம் ஒவ்வொன்றாக விளக்கி சொல்கிறாள். இறுதியாக உங்களை கத்தியால் குத்தியது இந்த ஷண்முகம் தானே என்று கேட்க பாக்கியம் ஷண்முகமா? அவன் எப்படி என்னை குத்துவான்? என்னை குத்தியவன் பார்க்கறதுக்கு என் புருஷன் உருவ ஜாடையில் தான் இருந்தான் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார்.
Anna serial
பிறகு கோர்ட் ஷண்முகத்தை விடுதலை செய்து இந்த வழக்கை விசாரித்து குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசுக்கு உத்தரவிடுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.