- Home
- Gallery
- அதிர்ச்சி கொடுத்த ஷண்முகம்.. சௌந்தரபாண்டி எடுத்த சபதம்? என்ன நடக்க போகுது.. அண்ணா சீரியல் அப்டேட்!
அதிர்ச்சி கொடுத்த ஷண்முகம்.. சௌந்தரபாண்டி எடுத்த சபதம்? என்ன நடக்க போகுது.. அண்ணா சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி ஹாஸ்பிடலுக்கு சூடாமணி பெயரை வைக்க வைகுண்டம் எமோஷனலான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது கோவிலில் இருந்து ஹாஸ்பிடல் திறப்பு விழாவிற்கு வரும் சௌந்தரபாண்டி ஹாஸ்பிடலுக்கு சூடாமணி பெயர் வைத்திருப்பதையும் போர்டில் பரணி ஷண்முகம் என பெயர் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதனை தொடர்ந்து சனியன் அவரது பங்கிற்கு ஏற்றி விட உள்ளே வந்த அவர் பரணியிடம் எதுக்கு சூடாமணி பெயர் என்று கேள்வி எழுப்புகிறார்.
உடனே பரணி அது என்னுடைய அத்தையோட பெயர் அதனால் வச்சிருக்கேன் என்று சமாளித்து விடுகிறாள். பிறகு ஹாஸ்பிடலை திறந்து வைக்க பரணி வைகுண்டத்தை கூப்பிட ஷண்முகம் நம்ம அம்மாவை அசிங்கப்படுத்தி ஜெயிலுக்கு அனுப்பின சௌந்தரபாண்டி கையாலயே இந்த ஹாஸ்பிடலை திறந்து வைக்க வேண்டும் என சொல்ல வைகுண்டமும் சம்மதிக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன் பிறகு எல்லாரும் சேர்ந்து சௌந்தரபாண்டியை வைத்து ஹாஸ்பிடலை திறந்து வைக்க அங்கிருந்தவர்கள் பிரேசிடண்ட் ஷண்முகம் சொன்ன மாதிரியே மனைவியை வைத்து ப்ரீ ஹாஸ்பிடல் திறந்துட்டாரு என வாழ்த்தி பாராட்டுகின்றனர். கூட்டத்தில் சிலர் அடுத்த தர்மக்கத்தா ஷண்முகம் வாழ்க என்று கோஷம் போட சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைந்து வெளியேறுகிறார்.
சனியன் சண்முகத்துக்கு தர்மகத்தா பதவியை மட்டும் விட்டு கொடுக்க கூடாது. அவன் மட்டும் தர்மகத்தா ஆகிட்டா உங்க தவறுகள் அனைத்தும் வெளியே தெரிந்து விடும் என எச்சரித்து செல்கிறான். பிறகு சௌந்தரபாண்டி நான்கு ஐந்து பூட்டு போட்டிருக்கும் ஒரு அறைக்குள் நுழைய அங்கு கோவில் நகைகளாக இருக்கிறது. பிளாஸ்கட்டில் ஒரு கொலை நடந்த விஷயங்கள் வந்து போக சௌந்தரபாண்டி டேய் ஷண்முகம் உன்னை தர்மகத்தா ஆகவே விட மாட்டேன் என சபதம் எடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.