ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்!!
Smart TV Cleaning Tips : உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவியை நீங்கள் சரியாக சுத்தம் செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்.
தற்போது அனைவரது வீட்டிலும் ஸ்மார்ட் டிவி இருக்கும். ஆனால், சிலர் மட்டுமே அதை சரியான முறையில் சுத்தம் செய்கிறார்கள். பெரும்பாலானோர், சுத்தம் செய்ய மறந்துவிடுகிறார்கள்.
ஆனால், நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய விட்டால், அது விரைவில் பழுதடைந்துவிடும். எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் டிவியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்வதற்கு முன் முதலில் டிவியின் பிளக் பாயிண்டிலிருந்து வயரை அவிழ்த்துவிடுங்கள். அதுபோல, டிவியின் திரையை ஈரமான துணியால் துடைக்க கூடாது.
இதையும் படிங்க: வீட்டை இப்படி சுத்தம் செய்ங்க.. எப்போதும் பளபளனு இருக்கும்..!
பிறகு ஒரு உலர்ந்த துணியை கொண்டு டிவியில் இருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை மெதுவாக சுத்தம் செய்யுங்கள். இதற்கு நீங்கள் பருத்தி அல்லது பாலிஸ்டர் துணி, செய்தித்தாள் போன்றவற்றை பயன்படுத்தினால், டிவியின் திரையில் கீறல் விழாது. அதுபோல, நீங்கள் மைக்ரோஃபைபர் துணியையும் பயன்படுத்தலாம்.
டிவியின் திரையில் கரைகள் இருந்தால் அதை விரல் நகங்களால் ஒருபோதும் சுத்தம் செய்யக்கூடாது இதனால் திரையில் கீரல்கள் ஏற்படும். மேலும், சோப்பு கூட பயன்படுத்த வேண்டாம். எனவே, அதை அகற்ற நீங்கள் சானிடைசர் பயன்படுத்தலாம். அது கூட நல்லது தான். உங்கள் வீட்டில் ஸ்கிரீன் கிளீனர் இருந்தால் கூட பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: 1 பைசா செலவில்லாமல் வீட்டில் தங்க நகைகளை பாலிஷ் செய்ய இப்படியும் ஒரு வழி இருக்கா?! வெறும் இரண்டே பொருள் போதும்
அதுபோல, ஒருமுறை துணியை துடைத்த பிறகு, வேறு துணியை பயன்படுத்துங்கள். ஒரே துணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் திரையில் கீறல்கள் விழும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.