- Home
- Gallery
- இந்தியன் 2 பட வாய்ப்பு.. கிடைக்க காரணம் ராம் சரண் தான்.. எப்படி? தன்மையோடு உண்மையை சொன்ன எஸ்.ஜே. சூர்யா!
இந்தியன் 2 பட வாய்ப்பு.. கிடைக்க காரணம் ராம் சரண் தான்.. எப்படி? தன்மையோடு உண்மையை சொன்ன எஸ்.ஜே. சூர்யா!
S.J Suryah : தனது இயக்குனர் பணிக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, நடிப்பு அரக்கன் என்ற பட்டத்திற்கு ஏற்றார் போல, பல படங்களில் பட்டாசான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார் எஸ்.ஜே.சூர்யா.

Vaali
திரைப்படங்கள் மீது உள்ள ஆசையின் காரணமாக சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தவர் சூர்யா. சென்னையில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பாக்யராஜ் மற்றும் வசந்த் போன்ற பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். கடந்த 1999ம் ஆண்டு வெளியான தல அஜித் அவர்களுடைய "வாலி" என்கிற திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஹிட் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார் எஸ். ஜே சூர்யா.
kizhakku chimayile
இயக்குனராக பல படங்களில் தொடர்ந்து அசத்தி வந்த எஸ் ஜே சூர்யா, கடத்த 1988ம் ஆண்டு முதலே நடிகராகவும் கோலிவுட் உலகில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 2024ம் ஆண்டில் மட்டும் அவருடைய நடிப்பில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்தும் வருகிறார்.
Indian 2
"இந்தியன் 2" திரைப்பட ப்ரமோஷன் பணிகளில் உள்ள நடிகர் எஸ்.ஜே சூர்யா, தனக்கு இந்தியன் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து மிகவும் அழகாக மனம் திறந்து இருக்கிறார். புகழின் உச்சியில் இருக்கும் எஸ்.ஜே சூர்யா, தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணம் ராம் சரண் தான் என்று கூறியுள்ளது, பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
Game changer
சங்கரின் "இந்தியன் 2" திரைப்படத்தை போல, சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ராம் சரணின் "கேம் சேஞ்சர்" திரைப்படத்திலும் எஸ். ஜே. சூர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதலில் அந்த திரைப்படத்தில் ராம் சரனோடு இணைந்து ஒரு காட்சியில் நடித்த போது, அதை மெய்சிலிர்த்து பார்த்த சங்கர், அதன் பிறகு தான் இந்தியன் 2 திரைப்படத்தில் தன்னை நடிக்க அணுகியதாக அவர் கூறியிருக்கிறார்.