- Home
- Gallery
- நெப்போலியன் தனது மருமகளுக்கு ரூ.2000 கோடி சொத்தை எழுதி கொடுத்தாரா? பிரபலம் சொன்ன டாப் சீக்ரெட்..
நெப்போலியன் தனது மருமகளுக்கு ரூ.2000 கோடி சொத்தை எழுதி கொடுத்தாரா? பிரபலம் சொன்ன டாப் சீக்ரெட்..
பிரபலங்களை பற்றி யூ டியூப் சேனல்களில் பேட்டியளித்து வரும் பயில்வான் ரங்கநாதன் நெப்போலியன் மகனின் திருமணம் குறித்து பேசி உள்ளார்.

Actor Napoleon
90களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் வில்லனாக நடித்த அவர், தொடர்ந்து ரஜினியின் எஜமான் படத்திலும் வில்லனாக நடித்திருப்பார்.
Actor Napoleon
இதை தொடர்ந்து தெலுங்கு, மலையாள சினிமாவிலும் வில்லனாக நடித்து வந்தார். பின்னர் ஹீரோவாகவும் பல படங்ககளில் நடித்தார். அவர் சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.
Actor Nepolean movies
கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நெப்போலியன் திமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய அமைச்சர் என பல பொறுபுகளை வகித்துள்ளார். நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
Actor Napoleon
இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இதில் 4 வயது இருக்கும் போதே தனுஷிற்கு அரிய வகை தசை சிதைவு நோய் ஏற்படவே, அவருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்கா சென்ற அவர் ஒருக்கட்டத்தில் மகனின் உடல்நலனை கருத்தில் கொண்டு அமெரிக்காவிலே செட்டிலாகிவிட்டார். அங்கு சொந்தமாக பிசினஸ் செய்து வரும் அவர் இயற்கை விவசாயத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
Actor Napoleon Son Engagement
25 வயதாகும் தனது மகன் தனுஷிற்கு திருமணம் செய்ய நெப்போலியன் ஏற்பாடு செய்து வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நெப்போலியன் மகன் தனுஷின் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வெளியானது.
Actor Napoleon Son Engagement
உடல்நிலை பிரச்சனை காரணமாக தனுஷ் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் அவருக்கு வீடியோ காலில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தனுஷ் வர முடியாவிட்டாலும் நெப்போலியன் தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்து நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளார்.
Actor Napoleon Son Engagement
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயாவை தான் நெப்போலியன் தனது மகனுக்கு நிச்சயம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Bayilvan Ranganathan About Actor Napoleon Son Marriage
இந்த நிலையில் பிரபலங்களை பற்றி யூ டியூப் சேனல்களில் பேட்டியளித்து வரும் பயில்வான் ரங்கநாதன் நெப்போலியன் மகனின் திருமணம் குறித்து பேசி உள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர் “ தனது மகனின் உடல்நலனை கருத்தில் கொண்டே நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். நெப்போலியன் மகன் தனுஷுக்கு தசை பிறழ்வு நோய் இருப்பதால் அவரால் நடக்க முடியாது. அவர் விமானத்திலும் பயணிக்க முடியாது. இதனால் மகனின் நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்து நடத்தி உள்ளார்.
Bayilvan Ranganathan About Actor Napoleon Son Marriage
நிச்சயதார்த்தத்திற்காக முன்கூட்டியே நெல்லை வந்த நெப்போலியன் குடும்பத்தினர் மணமகளிடம் மனம் விட்டு பேசினர். அதே போல் வீடியோ காலில் அக்ஷயாவும் - தனுஷும் பேசினர். இருவரின் முழு சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. நெப்போலியன் தனது மகனுக்காக ஒரு ஆடம்பர கப்பலில் டிக்கெட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Bayilvan Ranganathan About Actor Napoleon Son Marriage
இதனால் மணமகன் தனுஷ் சென்னை வருவதற்கும் வாய்ப்புள்ளது. இல்லை எனில் நெப்போலியன் இங்கிருந்து அனைவரையும் அமெரிக்கா கூட்டி சென்று அங்கு திருமணம் நடைபெறவும் வாய்ப்புள்ளது. நெப்போலியன் தனது மருமகளுக்கு ரூ.2000 கோடி சொத்தை எழுதி வைத்திருக்கிறார்.” என்று தெரிவித்தார்.