- Home
- Gallery
- மாமனாரா இருந்துட்டு அமிதாப் இப்படி செய்யலாமா? ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து முடிவு ஏன்? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்
மாமனாரா இருந்துட்டு அமிதாப் இப்படி செய்யலாமா? ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து முடிவு ஏன்? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்
பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவு குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.

Aishwarya Rai - Abhishek Bachchan
சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கோலிவுட்டில் தனுஷ் - ஐஸ்வர்யா, டோலிவுட்டில் சமந்தா - நாக சைதன்யா போன்ற ஜோடிகளின் விவாகரத்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைய உள்ள பாலிவுட் ஜோடி தான் அமிதாப் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Aishwarya Rai - Abhishek Bachchan Divorce issue
நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து தான் திருமணம் செய்துகொண்டார் அபிஷேக் பச்சன். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே அண்மையில் அம்பானி மகன் திருமணத்திற்கு பின்னர் தான் ஐஸ்வர்யா - அபிஷேக் ஜோடியின் விவாகரத்து விவகாரம் பூதாகரமானது. ஏனெனில் அதில் அபிஷேக் பச்சன் தன்னுடைய தந்தை மற்றும் தாய் உடன் தனியாக வந்திருந்தார். அதே விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளுடன் மட்டும் வருகை தந்திருந்தார். அதில் ஐஸ்வர்யா - அபிஷேக் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
இதையும் படியுங்கள்... படக்குனு பாவாடை தாவணிக்கு மாறிட்டாங்க - ட்ரெடிஷனல் உடையில் யாஷிகா ஆனந்த்!
Aishwarya Rai
இதனால் அவர்களின் விவாகரத்து விவகாரம் பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ள நிலையில், தற்போது பயில்வான் ரங்கநாதன் பல்வேறு ஷாக்கிங் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். ஐஸ்வர்யா - அபிஷேக் பிரிவுக்கு காரணமே அமிதாப் பச்சன் தான் என அவர் தெரிவித்துள்ளார். ஜூஜூ பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான வீட்டை அமிதாப் பச்சன் தன்னுடைய மகளுக்கு எழுதி வைத்திருக்கிறார். இதனால் மாமனார் மீது ஐஸ்வர்யாவுக்கு கோபம் ஏற்பட்ட அது பிரிவை ஏற்படுத்தி உள்ளது.
Amitabh Bachchan
இதன்காரணமாக ஒரே வீட்டில் இருந்தும் யாருடனும் பேசாமல் இருந்து வந்தாராம் ஐஸ்வர்யா. அதுமட்டுமின்றி அபிஷேக் பச்சன் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் அது ஐஸ்வர்யா காதுக்கு சென்றது குடும்பத்தில் மேலும் விரிசலை ஏற்படுத்தியதாகவும் பயில்வான் கூறி இருக்கிறார். இருப்பினும் அந்த நடிகை யார் என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை.
இதையும் படியுங்கள்... "லவ் யூ பாலா அண்ணா".. "வணங்கான்" படம் பார்த்து ரிவியூ சொன்ன பிரபலம் - படம் எப்படி இருக்கு?