Liquor bars : நள்ளிரவு ஒரு மணி வரை மதுபான பார்கள், பப்புகளுக்கு அரசு அனுமதி- மதுபிரியர்கள் உற்சாகம்
மதுபிரியர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய வகையில் பெங்களூரில் உள்ள நட்டத்திர ஹோட்டல், மதுபான விடுதிகள் மற்றும் பப்புகள் நள்ளிரவு ஒரு மணி வரை செயல்பட கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.
தொழில் துறை வளர்ச்சி
நவீன காலத்திற்கு ஏற்ப ஒரு சில நடைமுறைகளை அரசுகளும் தளர்த்தி வருகிறது. அந்த வகையில் இரவு 10 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள், கடைகள் செயல்பட வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. ஆனால் தற்போது தொழில் துறை வளர்ச்சியால் இரவு பணியும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் உணவு விடுதிகள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இளைஞர்களின் சொர்க்கம்
குறிப்பாக குளு, குளு நகரம் என அழைக்கப்படும் பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, தொழில் நகரம் என பல பொருட்களின் உற்பத்தி தொழிற்சாலை என நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல உயர் தர கல்வி நிறுவனங்களும் உள்ளது. பெங்களூர் என்றாலே இளைஞர்களுக்கு சொர்க்கமாக இருக்கும். இதனால் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பல மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு வந்து செல்கின்றனர்.
இரவு ஒரு மணி வரை அனுமதி
பெங்களூருவில் உள்ள முக்கிய சாலைகளில் பல வண்ணங்களில் மதுக்கடைகள், மதுபான விடுதி, கேளிக்கை விடுதிகள் ஏராளமாக உள்ளது. இந்த விடுதியில் வார நாட்கள் மட்டுமில்லாமல் தினமும் இரவு நேரத்தில் கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பங்கேற்று கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரில் இரவு ஒரு மணி வரை மதுபான விடுதி திறந்து வைத்து மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசு உத்தரவு என்ன.?
ஏற்கனவே இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசின் இந்த புதிய உத்தரவின்படி கிளப்கள், நட்சத்திர ஹோட்டல்களில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானத்தை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான பார்களில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானத்தை வழங்கலாம் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Bangalore PG
எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள்
கர்நாடகா அரசின் இந்த புதிய உத்தரவிற்கு ஐடி நிறுவனத்தில் இரவு நேரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தரப்பு வரவேற்றுள்ளது. மற்றொரு தரப்போ இது இளைஞர்களை சீரழிக்கும் அறிவிப்பு என விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.