Ukkadam - Athupalam Flyover: நைட் டைம்ல உக்கடம் மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு தடை! என்ன காரணம் தெரியுமா?
கோவை மக்களின் கனவு திட்டமாக இருந்த உக்கடம் - ஆத்துப்பாலம் இடையேயான மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
Ukkadam - Athupalam Flyover
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக இருக்கும் கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உக்கடம் டூ ஆத்துப்பாலம் இடையே அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே அப்பகுதி மக்களிடையே நிலவி வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பாலத்தின் பணிகள் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
Ukkadam - Athupalam Flyover
முதல் கட்டமாக ரூ.121 கோடி மதிப்பில் மேம்பாலமும், இரண்டாம் கட்டமாக ரூ.195 கோடியில் மேம்பாலமும் கட்டும் பணி நடந்து முடிந்தது. மொத்தமாக நில எடுப்பு பணிக்கு ரூ.152 கோடி செலவிடப்பட்டது. மொத்தம் ரூ.481.95 கோடி மதிப்பிட்டில் மேம்பால பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி தொடங்கி வைத்தார்.
Ukkadam Flyover
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையில் 3.8 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ள இந்த மேம்பாலத்தை 125 தூண்கள் தாங்கி நிற்கின்றன. பொள்ளாச்சி, பாலக்காடு சாலையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையில் மக்களின் பயனளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது இந்த மேம்பாலம். முன்னதாக அலுவலகங்கள் நேரங்களில் உக்கடம் டூ ஆத்துப்பாலம் வரை செல்ல 30 நிமிடங்கள் வைர ஆன நிலையில் பாலம் திறக்கப்பட்டதை அடுத்து மூன்று நிமிடங்களில் பயணிக்க முடிகிறது. இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
Ban vehicle
அதாவது மேம்பாலத்தின் மீது அதிவேகமாகச் செல்ல வேண்டாம் என வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளனர். மேம்பாலத்தில் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் பீக் ஹவர் முடிந்த உடன் இரவு நேரங்களில் போக்குவரத்தை நிறுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.