- Home
- Gallery
- ஜூலை பிறந்துருச்சு.. புது பைக் வாங்கணுமா? Bajaj முதல் BMW வரை.. இம்மாதம் வெளியாகும் டாப் 4 பைக் & ஸ்கூட்டர்ஸ்!
ஜூலை பிறந்துருச்சு.. புது பைக் வாங்கணுமா? Bajaj முதல் BMW வரை.. இம்மாதம் வெளியாகும் டாப் 4 பைக் & ஸ்கூட்டர்ஸ்!
Bikes & Scooters : ஜூலை மாதம் பிறந்துள்ள நிலையில், ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பிரபல பைக் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வண்டிகளை வெளியிடவுள்ளது.

Bajaj
பஜாஜ் CNG
வரலாற்று சாதனை படைக்கும் விதமாக, உலகத்திலேயே முதல் முறையாக இந்தியா தனது CNG பைக்கை வெளியிடவுள்ளது. Bajaj CNG என்ற அந்த பைக் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி வெளியாகிறது. இருப்பினும், இந்த பைக்கின் பெயரை பஜாஜ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இது 100 முதல் 150 சிசி பிரிவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபிஸ் போகணுமா.. மளிகை கடைக்கு போகணுமா.. பெண்களுக்கான சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்!
BMW CE 04
BMW CE 04
BMW அதன் CE 04 மின்சார ஸ்கூட்டர் மூலம், மின்சார இரு சக்கர வாகன சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது. ஆகவே இந்த BMW CE 04, ஒரு பெரிய 8.9kWh பேட்டரியைக் கொண்டிருக்கும். மற்றும் அதன் மோட்டார் 120kph அதிகபட்ச திறனை வெளிப்படுத்தும். வரும் ஜூலை 24ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும். எலக்ட்ரிக் வாகனமாக இருந்தாலும் இந்திய சந்தையில் இது சுமார் 13 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
Royal Enfield
ராயல் என்பீல்ட் Guerrilla 450
பிரபல ராயல் என்பீல்ட் நிறுவனம் தனது புதிய Guerrilla 450 என்ற பைக்கை இப்பொது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. வரும் ஜூலை 17ம் தேதி இந்த பைக் வெளியாகிறது. Himalayan பைக்கிற்கு பிறகு, இந்த Guerrilla 450 தான் திரவ-குளிரூட்டப்பட்ட ஷெர்பா 450 மோட்டாரைப் பயன்படுத்தும் இரண்டாவது மாடலாக இருக்கும். இந்தியாவில் 2,40,000 முதல் 2,60,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம்.
BSA Gold Star
BSA கோல்ட் ஸ்டார்
பிரபல BSA கோல்ட் ஸ்டார் இறுதியாக இந்தியாவிற்கு வந்துள்ளது, ஜூலை மாதம் இல்லாமல் எதிர்வரும்
நமது சுதந்திர தினத்தன்று இது அறிமுகமாகிறது. BSA, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இது Rotax-Based 652cc திரவ-குளிரூட்டப்பட்ட, தம்பர் 45hp மற்றும் 55Nm முறுக்குவிசை மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை 3.03 லட்சம் முதல் 3.31 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் அதிகமான மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள்!