- Home
- Gallery
- "ஹோம்லி பொண்ணுங்க நானு" நட்பின் கல்யாணம்.. தாய் மண்ணுக்கு சென்ற National Crush - பியூட்டியின் லூட்டி Clicks!
"ஹோம்லி பொண்ணுங்க நானு" நட்பின் கல்யாணம்.. தாய் மண்ணுக்கு சென்ற National Crush - பியூட்டியின் லூட்டி Clicks!
Actress Rashmika Mandanna : கர்நாடகாவில் பிறந்து, இன்று இந்திய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் "நேஷனல் க்ரஷ்" என்ற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

rashmika in marriage
கர்நாடகாவின் குடகு பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி பிறந்த நடிகை தான் ராஷ்மிகா மந்தனா, இவருக்கு வயது 28. கன்னட மொழி திரைப்படங்கள் மூலமாக இவர் திரையுலகில் அறிமுகமானார்.
Rashmika in Kodagu
தொடர்ச்சியாக கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தானா, கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான நடிகர் கார்த்தியின் "சுல்தான்" திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார்.
Rashmika mandanna
அதன் பிறகு கடந்த 2023ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு என்கின்ற திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடித்திருந்த ராஷ்மிகா மந்தானா. தற்பொழுது தனுஷின் நடிப்பில் உருவாகும் "குபேரா" திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
Rashmika
இந்நிலையில் வெகு நாட்கள் கழித்து தனது சொந்த ஊரான குடகு பகுதிக்கு, தனது நம்பி ஒருவரின் திருமணத்திற்காக சென்றுள்ள ராஷ்மிகா, தனது தோழிகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.