- Home
- Gallery
- அடிக்க வந்த கோபி! ஈஸ்வரிக்கு ஆப்பு வைத்த ராதிகாவின் அம்மா? பரபரப்பில் உச்சத்தில் 'பாக்கியலட்சுமி' சீரியல்!
அடிக்க வந்த கோபி! ஈஸ்வரிக்கு ஆப்பு வைத்த ராதிகாவின் அம்மா? பரபரப்பில் உச்சத்தில் 'பாக்கியலட்சுமி' சீரியல்!
'பாக்கியலட்சுமி' சீரியலில் இருந்து வெளியாகி உள்ள புதிய புரோமோ... பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர், 'பாக்கியலட்சுமி'. திங்கள் முதல் சனி வரை... பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
குடும்பமே கோவில்... கணவனே தெய்வம் என வாழ்ந்து வந்த பாக்கிய லட்சுமியை விருப்பம் இல்லாமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால், எப்போதும் அவரை மட்டம் தட்டி கொண்டே இருக்கும் கோபி, தன்னுடைய முன்னாள் காதலி ராதிகாவை சந்தித்த பின்னர் அப்படியே அவர் பக்கம் சாய துவங்குகிறார்.
தன்னுடைய குடும்பம் குறித்து, ஏதேதோ பொய்கள் சொல்லி ராதிகாவை தன் வலையில் வீழ்த்தும் கோபி, மகனுக்கு திருமணம் ஆன பின்னர்... ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். பாக்கியாவும் கணவர் கோபியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், தன்னுடைய வாழ்க்கையிலும், தொழிலும் முன்னேரே கொண்டிருக்க இப்போது ராதிகாவின் அம்மாவால் ஈஸ்வரிக்கு புதிய பிரச்சனை வந்துள்ளது.
கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா கர்ப்பமாக இருந்த நிலையில், அவர் கால் தடுக்கி விழுந்ததில் அந்த குழந்தை கலைந்து போகிறது. குழந்தையை பறிகொடுத்த வருத்தத்தில், இப்படி நடக்க காரணம் ஈஸ்வரி தான் என ராதிகா கூற, கோபியும் அதை நம்பி தன்னுடைய அம்மாவை இப்போது வீட்டை விட்டே அனுப்பி விட்டார்.
பிக்பாஸ் ராஜூக்கு அடித்த ஜாக்பார்ட்! 'பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம்!
தன்னுடைய அம்மா மீண்டும் பாக்கியாவிடம் சென்றதால் சோகத்தில் மீண்டும் குடிகாரராக கோபி மாறிய நிலையில், ஃபுல் போதையில் வீட்டுக்கு வரும் கோபியை பார்த்து ராதிகாவின் அம்மா, உனக்கு குடிகார புருஷன், கொலைகார மாமியார் என வார்த்தையை விட, இதனால் கோபமடையும் கோபி ராதிகாவின் அம்மாவை அடிக்கடி கை ஓங்கி விடுகிறார்.
இந்த கோவத்தை கோபியிடம் காட்ட முடியாமல், நேராக காவல் நிலையம் சென்று... தன்னுடைய மகளின் கரு களைய காரணம் ஈஸ்வரி தான் என்றும், ஈஸ்வரியால் ஏதேனும் தன்னுடைய மகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என பயமாக இருக்கிறது என புகார் கூற, போலீசார் ஈஸ்வரியை கைது செய்ய பாக்கியா வீட்டுக்கு வருகிறார்கள். ஈஸ்வரி கைது செய்யப்படுவாரா? என்கிற பரபரப்பின் உச்சத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.