குறைந்த விலையில் அயோத்திக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
குறைந்த விலையில் அயோத்திக்கு விமானத்தை முன்பதிவு செய்யலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Ayodhya Air Fare
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கு அவர் அயோத்தியின் மகரிஷி வால்மீகி புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார். இதனுடன், 15,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் பரிசாக வழங்கினார்.
Ayodhya
மேலும் மறுவடிவமைக்கப்பட்ட ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இதற்கிடையில், இண்டிகோ நிறுவனம் டெல்லியில் இருந்து அயோத்தியின் புதிய விமான நிலையத்திற்கு முதல் விமானத்தை தொடங்கியது.
Air Fare
ஜனவரியில் அயோத்தியில் பிரம்மாண்டமான பிரான் பிரதிஷ்டை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ராம்நகரிக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Flight Ticket
நீங்களும் அயோத்திக்கு செல்ல விரும்பினால் வெறும் 4000 ரூபாய் செலவாகும். இண்டிகோவின் இணையதளத்தின்படி, ஜனவரி 6 ஆம் தேதி டெல்லியில் இருந்து அயோத்திக்கு விமான கட்டணம் ரூ.3,999.
Ram Mandir Temple
டெல்லியிலிருந்து அயோத்திக்கு ஜனவரி மாதத்திற்கான விமான டிக்கெட் ரூ.3,597. திரும்ப கட்டணம் ரூ.3,598. அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு செல்ல விரும்பினால் ரூ.5,199க்கு இண்டிகோ விமானத்தில் செல்லலாம்.
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..