தங்கலான் போல "பீரியட் படமாக" வெளியாகி மெகா ஹிட்டான டாப் 4 தமிழ் படங்கள்!
Period Movies : கோலிவுட் உலகை பொறுத்தவரை "Period" வகையை சேர்ந்த திரைப்படங்களுக்கும் எப்போது அதிக வரவேற்பு உண்டு.
Ponniyin Selvan
பீரியட் படங்கள் என்றால் என்ன?
சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளாக இல்லாமல், முன்னொரு காலத்தில் நடந்த ஒரு தனி மனிதனை பற்றிய கதை அல்லது முன்பு நடந்தது போல எடுக்கப்படும் கற்பனை கதையை தான் பீரியட் படங்கள் என்பார்கள். இந்த வகை படங்களை எடுக்கும்போது தொழில்நுட்பக ரீதியகவும், கதையில் இடம்பெறும் கதாபாத்திரத்தின் உடை, சுற்றுப்புறம், மொழி வழக்கு என்று பல விஷயங்களை அந்த இயக்குனர் சரியாக கையாள வேண்டியிருக்கும்.
உதாரணமாக 1970களில் நடக்கும் விஷயங்களை படமாக எடுக்கும்போது, செல் போன் பயன்பாடு, சொகு கார்கள், ஹை டெக் சாலைகள் என்று நம்மால் எதையும் காட்டமுடியாது. ஆகவே அதற்கு தகுந்தாற்போல இயக்குனர் கதை மற்றும் படமெடுக்கப்படும் சுற்றுப்புறத்தை தேர்வு செய்யவேண்டும்.
செம க்யூட்.. நிறைமாத வயிற்றுடன்.. ட்ரெடிஷனல் போட்டோஷூட்.. ரித்திகாவின் உருக்கமான பதிவு..
Cheran's Autograph Movie
நூற்றுக்கணக்கான பீரியட் படங்கள் கோலிவுட் உலகில் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அதில் மக்கள் அதிகம் விரும்பிய, கடந்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் வெளியான டாப் 4 பீரியட் படங்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
அதில் முதலாவதாக இயக்குனர் சேரனின் "ஆட்டோகிராப்", ஒரு நாயகனின் மூன்று பருவங்களை மிகநேர்த்தியாக சொன்ன படம் இது. நடிகர்கள் தேர்வு, காட்சியமைப்பு என்று எல்லாமே இந்த படத்தில் டாப் நாட்ச் தான். அதிலும் குறிப்பாக நடிகை மல்லிகாவை இருவேறு பரிமாணங்களில் காட்டி தன்னுடைய திறமையால் மிரட்டியிருப்பர் சேரன்.
Imsai Arasan 23rd pulikesi
இம்சை அரசன் 23ம் புலிகேசி.. இந்த படம் வெளியாகி சுமார் 18 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், இன்றளவும் அதை போன்ற ஒரு படத்தை யாராலும் எடுக்க முடியவில்லை. இயக்குனராக அந்த படம் மூலம் அறிமுகமான சிம்புதேவன் முதல் படத்திலேயே சிரிப்பு சரவெடியை மக்களுக்கு பரிசளித்தார். மன்னர் காலத்து கதை என்பதால், படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு அம்சங்களும் அவ்வளவு நேரிதியாக அமைக்கப்பட்டிருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் வைகை புயல் வடிவேலுக்கு உச்சத்தை தந்தனும், வீழ்ச்சியை தந்தனும் அந்த ஒரே படம் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
Irumbukottai muratu singam
மீண்டும் சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் தான் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்". மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து Cowboyகள், நமது தமிழகத்திலும் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை விவரித்த படம் அது. மனோரமா,வி.எஸ் ராகவன் போன்ற மூத்த நடிகர்களும் இதில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்திருந்த மூத்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர் இப்படத்தில் ஒரு பழங்குடியின தலைவர் போல நடித்திருப்பார். மேலும் அந்த பழங்குடி மக்கள் பேசும் வசனம் அனைத்தையும் அவரே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mundasupatti
இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி மெகாஹிட்டான படம் தான் "முண்டாசுப்பட்டி". போட்டோ காமெராவை கண்டாலே பயப்படும் ஒரு கிராம மக்களின் கதையை சார்ந்து எடுக்கப்பட்ட படம் அது. நடிகர்கள் விஷ்ணு விஷால், காளி வெங்கட், முனீஷ்காந்த் மற்றும் மூத்த நடிகர் ஆனந்தராஜ் என்று அனைவருமே இந்த படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
'ரகு தாத்தா' படத்தில் கதையின் நாயகியாக ஜெயித்தாரா கீர்த்தி சுரேஷ்? விமர்சனம் இதோ..!